ஆஸ்திரேலியாவில் நாம் இலகுவாக அணுகக்கூடிய சுகாதார நிபுணர்களில் மருந்தாளர்களும் அடங்குவர்.
சமூக மருந்தகங்கள்(சில சமயங்களில் chemists என்றும் அழைக்கப்படுகின்றன) உள்ளூர் பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு சேவை செய்கின்றன,
அதே நேரத்தில் மருத்துவமனை மருந்தகங்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சேவை செய்கின்றன.
மருந்தகங்களில் பரந்த அளவிலான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில், பல எதிர்பாராத நோய்களுக்கு அல்லது நீண்ட கால சுகாதார நிலைமைகளுக்கு, உங்கள் மருத்துவரிடம் இருந்து prescription-மருந்துச் சீட்டு தேவைப்படுகிறது. இதனைக் கொடுத்து மருந்தகத்திலிருந்து மருந்துகளை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு மருந்தகங்கள் செயல்படும் விதத்தில் உள்ள வேறுபாடுகளை தாம் நேரில் கண்டுள்ளதாகக் கூறுகிறார் எகிப்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்ற மெல்பனைச் சேர்ந்த pharmacist Lena Mansour.
E-scripts are accessible on your phone Credit: Yong Hwee Goh
ஆஸ்திரேலியாவில், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே மருந்துச் சீட்டுகளை வழங்க முடியும்.
பின்னர் அந்த மருந்துச்சீட்டுக்களை தம்மிடம் சமர்ப்பித்து அதிலுள்ள மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என விளக்குகிறார் பெர்த்தில் உள்ள Captain Stirling Pharmacy உரிமையாளர் Tom Andrew.
ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் அனைத்து மருந்துச்சீட்டுகளிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்தில் காணப்படும் மூலப்பொருளின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்மூலம் ஒரு நோயாளி அந்த மருந்தை இலகுவாக அடையாளம் காண முடியும்.
இதேவேளை மருந்தகங்கள் அனைத்து மருந்து வகைகளிலும் brand-name மற்றும் மலிவான generic versions என இரண்டையும் சேமித்து வைக்கலாம். இந்த இரண்டு வகைகளிலும் ஒரே மாதிரியான மூலப்பொருட்களே உள்ளதுடன் இரண்டும் அரச மருந்துக் கட்டுப்பாட்டாளர்களால் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நோயாளி தனது மருந்துச் சீட்டை சமர்ப்பித்தவுடன் மருந்தாளர் நோயாளியின் விவரங்களைச் சரிபார்த்தபின் அவருக்கு brand-name கொண்ட மருந்தா அல்லது மலிவான generic version மருந்தா தேவை எனக் கேட்டறிவார்.
Pharmacist Lena Mansour - Image supplied. Pharmacist Tom Andrew – Image supplied. Pharmacist Yong Hwee Goh - Image supplied.
ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மருந்துகளும் poison-விஷம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் ஒவ்வொரு மருந்தும் நோயாளிகளுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பதன் அடிப்படையில் ஒரு அட்டவணையில் வகைப்படுத்தப்படுகிறது.
நீங்கள் இருக்கும் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து சில மருந்து வகைகளுக்கான அணுகல் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
Pharmacist-Only Medicines எனப்படுகின்ற Schedule 3 (S3) மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவையில்லை, ஆனால் அவை ஒரு மருந்தாளரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் மட்டுமே கிடைக்கும். அதேபோன்று Schedule 4 (S4) மருந்துகளுக்கு கட்டாயம் மருந்துச்சீட்டு தேவை.
ஆஸ்திரேலியாவில் Pharmaceutical Benefit Scheme -PBS உள்ளது, இது பல்வேறு வகையான மருந்துகளை மலிவு விலையில் வழங்கவென வடிவமைக்கப்பட்ட மானிய முறையாகும்.
இந்த மானியத்தைப் பெற, நீங்கள் ஆஸ்திரேலிய குடியிருப்பாளராக இருக்க வேண்டும் மற்றும் Medicare அட்டை வைத்திருக்க வேண்டும் என விளக்குகிறார் Tom Andrew.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மருந்துகளும் PBS திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்படவில்லை.
Pharmacists offer a large range of healthcare services and products. Credit: Yong Hwee Goh
இரத்த குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு, இரத்த சோகை பரிசோதனை மற்றும் நீரிழிவு பரிசோதனை உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார பரிசோதனைகளிலும் மருந்தாளர்கள் நமக்கு உதவ முடியும்.
சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், கோவிட்-19 மற்றும் influenza போன்ற நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க மருந்தாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் மருத்துவரின் மருந்துச்சீட்டின்றி கருத்தடை மாத்திரை போன்றவற்றை வழங்குவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்நிலைமை இருந்தால், அதிகமான மருந்துகளை பலமுறை வாங்க அனுமதிக்கும்வகையில் உங்கள் மருத்துவர் ஒரு மருந்துச் சீட்டை வழங்கலாம் என pharmacist Yong Hwee Goh விளக்குகிறார்.
Inside a compounding pharmacy Credit: Tom Andrew
உங்கள் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று உங்கள் மருந்தாளரைப் பற்றி தெரிந்துகொள்வது உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும்.
Lena Mansourஐப் பொறுத்தவரை, சமூக மருந்தாளுநராகப் பணிபுரிவது என்பது மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிறைவான வாழ்க்கை என்கிறார் அவர்.
Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our
page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.