உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு தாக்கத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் ஆஸ்திரேலிய பயண அனுபவத்தை நீங்கள் தேடுகிறீர்களா?
இயற்கை வனப்பகுதி, உணவு, கலை என எந்தவிதமான பயண அனுபவத்தை நாடினாலும் அவை இந்த நிலத்துடன் 65,000 ஆண்டுகள் தொடர்பைக் கொண்ட பூர்வீகக் குடிமக்கள் தொடர்பான சுற்றுலாக்களில் கிடைக்கின்றன.
பூர்வீக குடிமக்கள் தொடர்பான சுற்றுலாக்கள் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆழமாக்குவது மட்டுமல்லாமல், பூர்வீக குடி சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த உதவுவீர்கள்.
உண்மையான மற்றும் கலாச்சார ரீதியாக அதிவேக அனுபவங்களைத் தேடும் மக்களுக்கு பூர்வீக குடிமக்கள் தொடர்பான சுற்றுலாக்கள் மீது ஆர்வம் அதிகரித்துவருவதை Tourism Australia அங்கீகரிக்கிறது.
Jarramali Rock Art Tour Credit: The Edit Suite/Tourism Australia
சுற்றுலாப் பயணிகள், பூர்வீக குடிமக்கள் மற்றும் இந்த நாட்டைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள் என்பதால் இத்தகைய சுற்றுலாக்களை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் Discover Aboriginal Experiences நிர்வாக அதிகாரி Nicole Mitchell.
Discover Aboriginal Experiences ஏற்பாடு செய்யும் சுற்றுலா குழு ஊடான ஒவ்வொரு அனுபவமும் பூர்வீகக்குடியினர் அல்லது டோரஸ் ஸ்ரெயிட் தீவு பின்னணி கொண்டவர்களால் வழிநடத்தப்படுகிறது.
ஒவ்வொரு அனுபவமும் நாட்டை உயிர்ப்பிக்கும் அற்புதமான கதாபாத்திரங்களால் மெருகூட்டப்படுகிறது என்கிறார் Nicole Mitchell.
இந்நாடு மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை பூர்வீக குடி பின்னணிகொண்ட வழிகாட்டியின் ஊடாக அனுபவிப்பதற்கு சிறந்த பல வழிகள் உள்ளன.
சுற்றுலாக்கள் ஊடாக பூர்வீகக்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டால், அந்த மக்களின் கதைகளைக் கேட்கவும், நீங்கள் பயணிக்கும் நிலம் மற்றும் கடலைப் பற்றிய புரிதலைப் பெறவும் உதவும் என்கிறார் வடக்கு குயின்ஸ்லாந்தில் Walkabout Culture Adventuresஐ நடத்தும் Kuku Yalanji மனிதரான Juan Walker.
Tourism Australia recognises the growing interest in First Nations tourism as travellers seek out authentic and culturally immersive experiences.
அதன் வரலாறு, மரபுகள் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவை சுற்றுலாப்பயணிகளோடு அவர் பகிர்ந்து கொள்கிறார்.
பூர்வீக உணவுகள் அவற்றின் தனித்துவமான சுவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக புகழ்பெற்றவை என்பதால், அத்தகைய உணவு அனுபவங்கள் இப்போது பிரபலமான சுற்றுலாப்பயணங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.
Kungkas Can Cookஇன் இணை நிறுவனர், Rayleen Brown, Northern Territory ஐ பூர்வீக உணவுகளுக்குப் புகழ்பெற்ற பிராந்தியமாக வளர்ப்பதற்குப் பங்களித்து வருகிறார்.
அவர் உள்ளூர் பாலைவன உணவுகள் பற்றி சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவூட்டிவருகிறார்.
இந்த நாட்டின் வியத்தகு பகுதிகளை வெறுமனே நடைபயணமாக சென்று ஆராயத்தேவையில்லை. படகுப் பயணங்கள், scenic flights மற்றும் 4WD safaris என பல வழிகள் ஊடாகவும் இவற்றைக் காணலாம்.
Great Golf Courses of Australia aboriginal experience
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Kimberley பகுதியும் அதன் நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், வனவிலங்குகள், rock art மற்றும் swimming holesஉடன், பல அம்சங்களுக்கு தாயகமாக உள்ளது.
பூர்வீகக்குடிமக்கள் தலைமையிலான சுற்றுலாப்பயணங்கள் பயணிகளுக்கு இந்த தளங்களின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன.
Maruku Arts மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைதூர சமூகங்களைச் சேர்ந்த 900 கலைஞர்களைக் கொண்டுள்ளது.
அவர்களின் மூதாதையர் நிலங்களில் தொடர்ந்து வாழும் அதே வேளையில், இந்த கலைஞர்கள் பாரம்பரிய ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற தங்கள் படைப்புகளை விற்பனை செய்கின்றனர். இதன்மூலம் உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்குப் பட்டறைகள் மற்றும் கலாச்சார சுற்றுலாப்பயணங்களை வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு பூர்வீக நடைமுறைகள் மற்றும் கதைகள் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றனர்.
As a First Nations Storyteller, Bundjalung man Kyle Ivey guides visitors on a climb of the Sydney Harbour Bridge as part of the Burrawa Aboriginal Climb Experience. Credit: davidf/Getty Images
பூர்வீகக்குடி கலாச்சாரம் தொலைதூர பிராந்தியங்களில் மட்டுமே உள்ளது என்பது பொதுவான அனுமானம், ஆனால் எங்கள் நகரங்களிலும் நீங்கள் பூர்வீகக்குடியினரின் கதைகளை சந்திப்பீர்கள்.
Bundjalung மனிதரான Kyle Ivey பூர்வீகக்குடி பின்னணி கொண்ட ஒரு கதைசொல்லி ஆவார். Burrawa Aboriginal Climb Experience இன் ஒரு பகுதியாக சிட்னி துறைமுகப் பாலத்தில் ஏறும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவர் வழிகாட்டுகிறார்.
பாலத்தின் மேல் நடக்கும்போது பூர்வீகக்குடிமக்கள் தொடர்பான பல வரலாற்றுப்பின்னணிகளை அவர் விளக்குவார்.
60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு பூர்வீகக்குடியினரின் வருகை, தனது மூதாதையர்கள் இந்த நிலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் மற்றும் ஐரோப்பிய குடியேறிகள் வந்தவுடன் அது எப்படி மாறியது போன்ற பல வரலாற்றுப் பின்னணிகளை சுற்றுலாப்பயணிகளுக்கு Kyle Ivey விவரிப்பார்.
தனக்காக மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கலாச்சார குழுக்கள் சார்பில் தனது அறிவைப் பகிர்ந்து கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
மெல்பனின் நகர மையத்தில் நிறுவப்பட்டுள்ள பூர்வீகக்குடியினரின் கலை அம்சங்களைக் காண விரும்புபவர்கள், Yarra ஆற்றின் அருகே Birrarung Wilam Walkஇல் சேரலாம். வழிகாட்டி ஒருவருடனான நடைபயண சுற்றுலா இதுவாகும்.
உள்ளூர் Kulin மக்கள் கூடும் இடமாக இதன் முக்கியத்துவத்தையும் காலப்போக்கில் இந்த நிலம் எவ்வாறு மாறிவிட்டது என்பதையும் இந்த நடைபயண சுற்றுலா ஊடாக நீங்கள் அறியலாம்.
Petermann, Northern Territoty / Australia - December 8, 2019: A tour guide walked through the safety precautions of hiking into Kata Tjuta near a tent Credit: alanlim97/Getty Images
இது போன்ற பூர்வீகக்குடி பின்னணிகொண்டவர்கள் தலைமையிலான பயண அனுபவங்கள் மூலம், பூர்வீகக்குடியினரும் பூர்வீகக்குடி பின்னணி அல்லாதவர்களும் கலாச்சார அறிவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என Nicole Mitchell கூறுகிறார்,
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to