ஆஸ்திரேலிய வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் 20 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்குவது சிறந்தது.
இந்த விவரணத்தில் உங்களுக்கான சரியான வங்கிக் கணக்கை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவிலுள்ள 100 க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களிலிருந்து உங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பொருத்தமான வங்கி எது என்பதைத் தெரிவுசெய்யும்போது பல விடயங்களை சிந்தித்துப் பார்த்து முடிவெடுப்பது அவசியமாகும்.
ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிப்பதற்கு முதலில் நீங்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவராக அல்லது தற்காலிக அல்லது நிரந்தர வதிவிட உரிமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நிதி ஒப்பீட்டு இணையதளமான Finderஇன் நிதி நிபுணர் Sarah Megginson.
வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு வயது வரம்புகள் எதுவும் இல்லை. நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், இணை கையொப்பமிடுவதற்கு உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தேவை.
ஆஸ்திரேலியாவில் நிறைய வங்கிகள், credit unions மற்றும் building societies என பல இருந்தாலும், சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நான்கு வங்கிகளாக ANZ Bank, Commonwealth Bank, National Australia Bank மற்றும் Westpac ஆகியன உள்ளன என்கிறார் நிதி தொடர்பில் மக்கள் தமது முடிவுகளை எடுக்க உதவுவதற்கான ஆலோசனைகளை வழங்கும் ASIC [Australian Securities and Investments Commission]இன் Moneysmart இணையத்தளத்தைச் சேர்ந்த Andrew Dadswell.
பல தெரிவுகள் இருப்பதால், உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை ஆராய்வது சிறந்தது.
The 'big four' banks Source: AFP / PETER PARKS/AFP via Getty Images
Transaction accountஇல் நீங்கள் வட்டி பெற மாட்டீர்கள், ஆனால் அதை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுடன் இணைக்கலாம்.
இருப்பினும், savings accounts ஊடாக அதிக வட்டி விகிதங்களை பெற முடியும். எனவே உங்கள் Transaction accountஇல் தேவையான தொகையை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை high-interest savings accountஇல் வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனை என்கிறார் Andrew Dadswell.
நீங்கள் சம்பாதிக்கும் எந்தவொரு வட்டியும் உங்கள் வரி வருமானத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதை உங்கள் வரிக் கணக்கில் அறிவிக்க வேண்டும்.
சரி, எந்த வகையான வங்கி உங்களுக்கு பொருத்தமானது?
நீங்கள் நேரடியாக செல்லக்கூடிய வங்கியை விரும்புபவராக இருந்தால், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட பாரம்பரியமான 'பெரிய நான்கு' வங்கிகளில் ஒன்று அல்லது நன்கு அறியப்பட்ட ஒரு வங்கி உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
அதேநேரம் இணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான தெரிவுகளும் உங்களுக்கு உள்ளதாக Sarah Megginson கூறுகிறார்.
Your bank account will link to your credit or debit card. Credit: davidf/Getty Images
இதேவேளை உங்களுக்கான வங்கிக் கணக்கைத் திறக்க, நீங்கள் விரும்பும் வங்கிக் கிளைக்குச் செல்லலாம் அல்லது அவர்களின் இணையதளத்திற்குச் சென்று அறிவுறுத்தல்களைப் பின்பற்றலாம்.
உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்பே வங்கிக்கணக்கை நீங்கள் ஆரம்பிக்க முடியும்.
நீங்கள் online banking அல்லது phone banking appஐ பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் தேவையேற்படில் கூடுதல் கணக்குகளைத் திறக்கலாம்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களின் அடையாள ஆவணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.
அப்படியானவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றின் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும் என்கிறார் பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோருக்கு வங்கி விடயங்களில் உதவி வரும் Mariangela Stagnitti.
நீங்கள் விடுமுறைக்கு மட்டும் இங்கு வந்தால் உங்களால் வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது.
அதேநேரம் இங்கு புதிதாக வருபவர்கள், non-resident withholding taxஐ தவிர்ப்பதற்கு ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகத்தில் Tax File Numberஐப் பதிவுசெய்து, அதை 30 நாட்களுக்குள் வங்கிக்கு வழங்க வேண்டும்.
How important is smartphone functionality to you? Credit: andresr/Getty Images
நீங்கள் ஒரு transaction accountஇற்கு கட்டணம் செலுத்துகிறீர்கள் என்றால், கட்டணம் வசூலிக்காத பல நல்ல வேறு கணக்குகள் உள்ளதாகவும் அந்தத் தெரிவுகளையும் ஆராய்ந்து பார்க்கலாம் எனவும் Sarah Megginson ஊக்குவிக்கிறார்.
சில வங்கிகள் நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்பே ஒரு கணக்கைத் திறக்க அனுமதிக்கலாம். பின்னர் நீங்கள் இங்கு வந்தவுடன் ஒரு கிளைக்குச் சென்று உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி கேட்கலாம்.
ஆஸ்திரேலிய அரசு ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவருக்கும் 250,000 டொலர்கள் வரை உத்தரவாதம் அளிப்பதால் சில சந்தர்ப்பங்களில் உங்கள் நிதி நிறுவனம் திவாலானாலும் உங்கள் பணம் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.