ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்க வேண்டியவை

Australia Explained: Building your own home

Building your own home allows you to tailor the design to meet your needs. Credit: JulieanneBirch/Getty Images

ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும், ஆனால் அதை அடைவதற்கான அத்தியாவசிய படிகள் என்னவென்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்கவேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஏற்கனவே உள்ள ஒரு வீட்டை வாங்குவது ஒப்பீட்டளவில் இலகுவானதாகத் தோன்றலாம். ஆனால் நிலத்தை வாங்கி அதில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு கவனமாக திட்டமிட வேண்டும். ஆஸ்திரேலியாவில் உங்கள் சொந்த வீட்டைக் கட்டும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பில் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்களுக்கான வீட்டை வாங்க வேண்டும் என்ற தங்கள் கனவை நிறைவேற்றுகிறார்கள். ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவது சிலருக்கு விருப்பமான தெரிவாக இருக்காது. அவர்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் விரும்பிய அம்சங்களுக்கு ஏற்றவாறு ஒரு வீட்டை அவர்கள் புதிதாக கட்ட விரும்பலாம்.

அப்படியானவர்கள் வீடு கட்டுவதற்கான ஒரு நிலத்தை வாங்கிய பிறகு நிறைய படிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென JSH Projectsஇன் தலைமை நிர்வாக அதிகாரி Justin Hill விளக்குகிறார்.
Australia Explained: Building your own home
Try to secure a loan for both land and construction. Source: Moment RF / Andrew Merry/Getty Images
குறிப்பாக மேம்பாட்டு விண்ணப்பங்கள், கட்டுமானச் சான்றிதழ்கள் பெறுதல், நம்பிக்கைக்குரிய வீடு கட்டும் நிறுவனத்தைத் தெரிவுசெய்தல் என பலவற்றைச் செய்யவேண்டியிருக்கும் என அவர் சொல்கிறார்.

நிலம் மற்றும் கட்டுமானம் ஆகிய இரண்டிற்குமான நிதியைப் பெற்றுக்கொள்வது கட்டுமான செயல்முறையை எளிதாக்கும்.

இரண்டு கடன்களுக்கும் ஒன்றாக விண்ணப்பிப்பது நல்லது என சிட்னியில் உள்ள Centrum Finance Solutions நிறுவனத்தின் mortgage broker Sandip Nagadiya அறிவுறுத்துகிறார்.

உங்களிடம் construction contract மற்றும் building permit உட்பட அனைத்து ஆவணங்களும் இருந்தால், வங்கி உங்களுக்கு முழு ஒப்புதலை இலகுவாக வழங்கும் என்கிறார் அவர்.

எதிர்பாராத கட்டண அதிகரிப்புகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவென, குறிப்பிட்ட காலத்திற்கு செலவுகளை அதிகரிக்காதவகையிலான நிபந்தனையை உங்கள் கட்டுமான ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

எப்போதும் fixed-price building contractற்கு செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் 120 நாட்கள் அல்லது ஆறு மாதங்கள் விலையை உயர்த்தக்கூடாது என்ற நிபந்தனையை சேர்த்துக்கொள்வது அவசியம் எனவும் விளக்குகிறார் Sandip Nagadiya.
Justin Hill
Justin Hill, CEO, JSH Projects
அதேபோன்று நிலம் வாங்கியவுடன் விரைவில் கட்டுமானத்தைத் தொடங்குவதும் அவசியமாகும்.

நீங்கள் நிலத்தை வாங்கியவுடன், அடுத்த முக்கியமான படி, வீட்டைக் கட்டுவதற்குத் தேவையான செலவுகளைத் தீர்மானிக்க வேண்டும்.

கட்டுமானம் எதிர்பார்க்கப்படும் செலவுக்குள் இருப்பதை உறுதிசெய்யவென உங்கள் கட்டுமான நிறுவனத்துடன் விரிவாக கலந்துரையாடுவது முக்கியம்.

இந்த நடவடிக்கை எதிர்பாராத செலவுகளைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் எளிதான கட்டுமான செயல்முறையை உறுதி செய்கிறது என Justin Hill விளக்குகிறார்.

பொதுவாக, ஆஸ்திரேலியாவில் இரண்டு வகையான வீடு கட்டுபவர்கள் உள்ளனர்: ஒன்று Project home builders மற்றையது architecture home builders.

Project home builders எனப்படுபவர்கள் ஏற்கனவே வீடுகளின் வரைபடங்கள் அல்லது வடிவமைப்புகளை வைத்திருப்பார்கள். அந்த வரைபடங்களும் வடிவமைப்புக்களும் பொருந்தும்பட்சத்தில் சிறியளவான மாற்றங்களுடன் உங்களுக்குப் பிடித்த வீட்டை கட்டிக்கொள்ளலாம். Architecture home builders இடம் சென்றால் அவர்கள் உங்களுக்குப் பிடித்த வீட்டை கட்டிடக் கலைஞரைக் கொண்டு வடிவமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி அதற்கேற்ப கட்டுமானத்தை மேற்கொள்வார்கள்.
Australia Explained: Building your own home
Costs will depend on size and any upgrades. Source: Moment RF / Andrew Merry/Getty Images
நீங்கள் project home அல்லது கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட வீடு என எதைத் தேர்வு செய்தாலும், வீட்டின் அளவு பெரிதாகப் பெரிதாக செலவுகளும் அதிகரிக்கும்.

கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவை நிர்ணயிப்பதில் வீட்டின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.

செலவுகளை அதிகரிப்பது வீட்டின் அளவு மட்டுமல்ல, நீங்கள் திட்டமிடும் மேம்படுத்தல்களும் செலவுகளைக் கணிசமாக அதிகரிக்கலாம். பிரத்தியேகமான பொருட்கள், அம்சங்கள், வடிவங்கள் என அனைத்தும் ஒட்டுமொத்த செலவில் சேர்க்கப்பட வேண்டும்.

பொதுவாக, ஒவ்வொரு project home builder-இடமும் கூடுதல் மேம்படுத்தல் packages இருக்கும். அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு அவை கட்டுப்படியாகுமா என்பதைத் தீர்மானிக்கலாம்.

Project home buildersஆல் வழங்கப்படும் designs and plansஐப் பின்பற்றுவதானது ஒப்புதல் செயல்முறை மற்றும் கட்டுமானத்தை விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றும்.

முன்-வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் -Pre-designed plans பெரும்பாலும் கட்டுமான செயல்முறையை ஒழுங்குபடுத்துகின்றன. நேரம் மற்றும் செலவையும் குறைக்கின்றன.

ஏனென்றால் வீட்டிற்கான build model அவர்களிடம் உள்ளதால் அவர்கள் தமக்கான ஒப்புதலை மிக விரைவாகப் பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட செலவுக்குள் வீட்டைக் கட்டியும் முடிக்கலாம்.
Australia Explained: Building your own home
Sticking to the project builder's designs will make the construction quicker and more cost-effective. Credit: courtneyk/Getty Images
கட்டடக்கலைஞரின் உதவியுடன் வடிவமைக்கப்படும் வீடு, project homeஐ விட விலை அதிகம் என்றாலும், நீங்கள் அதை ஆரம்பம் முதலே வடிவமைக்கிறீர்கள் என்பதால் கட்டுமானத்தின்போது கூடுதல் செலவுகள் எதுவும் சேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதேபோன்று விலையுயர்ந்த modifications -மாற்றங்களின் தேவையின்றி மிகவும் தனித்துவமான உங்களுக்குப் பிடித்த வடிவமைப்பையும் இதன் ஊடாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு வழக்கமான கட்டுமான நிறுவனங்களுடன் பணிபுரிவதைத் தவிர, வீட்டின் உரிமையாளரே owner-builder ஆகப் பணியாற்றுவதற்கான தெரிவும் உள்ளது.

Owner-builder உரிமத்தைப் பெறுவது, உங்கள் சொந்த வீட்டை நிர்மாணிப்பதற்கு உங்களை அனுமதிக்கிறது. கட்டுமான செயல்முறைக்கான பல்வேறு வர்த்தகங்களை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த அணுகுமுறை கட்டுமானத்திட்டத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் சாத்தியமான சேமிப்பிற்கும் வழிவகுக்கும் என JSH Projectsஇன் தலைமை நிர்வாக அதிகாரி Justin Hill விளக்குகிறார்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to

Share