தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Doctor and patient in conversation in hospital hallway

Private health insurance (PHI) gives access to more comprehensive health services outside the public system. Credit: Solskin/Getty Images

தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலியர்கள் தரமான மற்றும் மலிவான பொது சுகாதார வசதிகளைப் பெறுகின்றனர். இதற்குக் கூடுதலாக, தனியார் மருத்துவ காப்பீடொன்றை வைத்திருப்பதற்கான தெரிவும் அவர்களுக்கு உள்ளது. இதன்மூலம் மருத்துவ சேவையொன்றைப் பெறுவதற்கான காத்திருப்பு நேரத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவநிபுணர்கள் தொடர்பில் அதிகளவான தெரிவுகளையும் வழங்குகிறது.

நாட்டில் 55 சதவீத ஆஸ்திரேலியர்கள் சுகாதார நிதியமொன்றில் சேர விரும்புகின்ற பின்னணியில், அது உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Close up of man filling in medical insurance form
There are no gap fees if you’re treated in a public hospital; however, you might encounter additional expenses on your bill. Source: iStockphoto / mediaphotos/Getty Images
மெடிகெயார் மற்றும் பொது மருத்துவமனைகள் நமது பெரும்பாலான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலவச அல்லது குறைந்த செலவில் சுகாதார சேவையை வழங்குகின்றன.

எனவே தனியார் மருத்துவக் காப்பீட்டிற்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

மெடிகெயாரில் எல்லா வகையான மருத்துவ வசதியும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், தனியார் மருத்துவக் காப்பீடு, மெடிகெயாரின் சுமையைக் குறைக்க முயற்சிப்பதாக கூறும் finder என்ற ஒப்பீட்டு இணையதளத்தின் காப்புறுதித்துறை நிபுணரான Tim Bennett, உதாரணமாக பல் மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை மெடிகெயாரில் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டுகிறார்.

GP, Imaging மற்றும் மருத்துவமனைக்கு வெளியேயான பரிசோதனைகள் போன்ற வெளிநோயாளர் சிகிச்சைக்கு உங்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டை பயன்படுத்தமுடியாது.
Senior woman at dental clinic for treatment
'Extras' covers additional specific health services such as dental, physiotherapy, and optical care. Credit: Luis Alvarez/Getty Images
தனியார் மருத்துவக் காப்பீடு ‘Hospital’ மற்றும் 'Extras’ எனப்படும் வகைகளை உள்ளடக்கியது.

Private patientஆக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ‘Hospital’ காப்பீடு பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட கவனிப்பின் கீழ் நீங்கள் உங்கள் சொந்த அறுவை சிகிச்சை நிபுணரையும் சிகிச்சைக்கான தேதியையும் இதன்கீழ் தெரிவு செய்யலாம்.

கூடுதலாக, ‘Extras’ என்பது பல், physiotherapy மற்றும் optical care போன்ற பிற குறிப்பிட்ட சுகாதார சேவைகளை உள்ளடக்கியது.

‘Hospital’ மற்றும் ‘Extras’ காப்பீடுகளை தனித்தனியாக வாங்கலாம் அல்லது ஒரு விரிவான காப்பீட்டுத் தொகுப்பாக ஒன்றாக இணைக்கலாம்.

இதேவேளை குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசாவில் வருபவர்களும் தனியார் மருத்துவக் காப்பீட்டை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் Private Healthcare Australia தலைமை நிர்வாக அதிகாரி Dr Rachel David.

தனியார் மருத்துவக் காப்பீட்டை வைத்திருக்கும் போக்கு ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடியேறியவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கோவிட்-19 பரவலுக்கு பிறகு, பொது மருத்துவமனை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தமே இதற்குக் காரணம் என்று Dr Rachel David விளக்குகிறார்.

அறுவை சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை போன்றவற்றுக்கான குறைவான காத்திருப்பு நேரத்தைக் கொண்டிருப்பதால் நிதி வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டை தெரிவுசெய்கிறார்கள். இது பொது சுகாதார கட்டமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தேவையிலுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது.

எப்படியிருப்பினும் தனியார் மருத்துவக் காப்பீட்டின் கீழோ அல்லது பொது சுகாதார கட்டமைப்பின்கீழோ உங்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என General Practitioner Chris Moy கூறுகிறார்.
Full length, wide shot nurse fills in form with family sitting in hospital waiting room
By law, private health insurance (PHI) can’t pay for outpatient care such as a visit to the GP or imaging and tests outside hospital. Credit: PixelCatchers/Getty Images
தனியார் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும், எனவே அரசு மூன்று திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் இதனைப்பெறுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது.

முதலாவதாக, private health insurance rebate மூலம் தகுதியானவர்கள் வரிச்சலுகை பெறுகின்றனர்.
இரண்டாவதாக, தனியார் மருத்துவக் காப்பீட்டை வைத்திருப்பவர்கள் Medicare Levy Surcharge-ஐ தவிர்க்கலாம். மூன்றாவது lifetime health cover loading ஆகும்.

‘Gap payment’ அல்லது ‘out-of-pocket’ செலவுகள் என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.

உங்களது சிகிச்சைச் செலவுக்கும் உங்களது தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் திருப்பித் தரும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இது.

நீங்கள் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் Gap fees எதுவும் இல்லை, இருப்பினும் உங்கள் bill-இல் கூடுதல் செலவுகளைக் காணலாம்.

நீங்கள் ஒரு private patient-ஆக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உங்களது தனியார் மருத்துவக் காப்பீட்டின்கீழ் ‘excess’ என்ற கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.

பல தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளதால் உங்களுக்குப் பொருத்தமானது எது என்பதை நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்

உங்களுக்குப் பொருத்தமான மருத்துவக் காப்பீட்டைத் தெரிவுசெய்யும்போது அரச இணையதளமான அல்லது , மற்றும் போன்ற ஒப்பீட்டுத் தளங்களில் உங்களுக்கிருக்கும் தெரிவுகளை நீங்கள் எடைபோடலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share