முக்கிய விடயங்கள்
- அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நம் நாட்டின் கொள்கையில் Medicare என்ற மருத்துவக் காப்பீடு மற்றும் பல தள்ளுபடிகளுடன் மருந்துகளை வழங்கும் PBS என்ற Pharmaceutical Benefits Scheme என்ற திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
- Medicare திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் பொதுவாக மருத்துவ சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
- Bulk billing செயல் முறையில் இணைந்துள்ள மருத்துவர்களிடம் சேவை பெறுவதற்கு ஒருவர் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை
- சில சேவைகளுக்கான முழுச் செலவையும் Medicare ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். அப்படியான சந்தர்ப்பங்களில், நோயாளிகள் முழுக் கட்டணத்திற்கும் Medicare மருத்துவ காப்பீட்டு நிதி வழங்கும் தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்
குடியுரிமையுடன் வாழ்பவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அகதிகள் என எந்த நிலையில் இங்கு வாழ்ந்தாலும், Medicare என்ற நாட்டின் மருத்துவ சுகாதார காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவ பராமரிப்பு சேவைகளையும் மற்றும் தேவையான மருந்துகளையும் இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்துடன் பெறலாம்.
இந்த Medicare மருத்துவக் காப்பீடு, பல தள்ளுபடிகளுடன் மருந்துகளை வழங்கும் PBS என்ற Pharmaceutical Benefits Scheme எனும் திட்டம் இரண்டும் இணைந்து செயல் படுகின்றன.
இந்தத் திட்டங்களின் மூலம் பயன் பெறுவதற்கு அட்டையைப் பெறுவதுதான் முதலில் செய்ய வேண்டும் என்கிறார் Services Australia அமைப்பின் சமூக தகவல் அதிகாரி, Justin Bott.
“ ஊடாக நீங்கள் இல் இணைந்து கொண்ட பின்னர், உங்களுக்கு Medicare அட்டை அனுப்பி வைக்கப்படும். ஒரு மருத்துவரைக் காண நீங்கள் செல்லும் போது அதனையும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும்” என்கிறார் Justin Bott.
“மருந்தகத்தில் மருந்துகளை வாங்கும் போதும், மருத்துவரிடம் சேவை பெறும் போதும் இந்த Medicare அட்டை மூலம் தள்ளுபடிகளையும் சில சலுகைகளையும் நீங்கள் பெறலாம்.”
செவி மடுக்க:
ஆஸ்திரேலியாவில் ambulance சேவையைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டுமா?
SBS Tamil
28/12/202208:27
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் முதலில் ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவ மையத்திற்குச் சென்று குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவசரமாக சிகிச்சை பெற வேண்டுமென்றால் நேராக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நீங்கள் செல்லலாம்.
இருந்தாலும், பெரும்பாலான சூழ்நிலைகளில், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது மருத்துவப் பரிசோதனை தேவைப்படுபவர்கள், நீண்ட காலமாக சிட்னியின் வடக்குப் புறநகர்ப் பகுதிகளில் மருத்துவராகக் கடமையாற்றும் Dr Douglas Hor போன்ற ஒருவரை முதலில் பார்ப்பார்கள்.
உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு அல்லது மருத்துவப் பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கு, பெரும்பாலான சூழ்நிலைகளில், குடும்ப மருத்துவர் தேவையான சிகிச்சை வழங்குவார்.
மேலதிக பரிசோதனைகள் செய்ய வேண்டுமா அல்லது நோய் வல்லுநர் ஒருவரை நீங்கள் பார்க்க வேண்டுமா என்பதைக் குடும்ப மருத்துவர் தீர்மானிப்பார். நோய் கடுமையாகி விட்டது என்று குடும்ப மருத்துவர் தீர்மானித்தால், உடனேயே நீங்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம்.
மருந்தகங்களில் மருந்து வாங்குவதற்கும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கும் பரிந்துரைத்து, மருந்துச் சீட்டுகளைக் குடும்ப மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.
தொடர்புடைய மேலதிக கட்டுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள்:
Antenatal care பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஏன் முக்கியம்?
Bulk billing என்றால் என்ன? மருத்துவத்திற்கான செலவை எப்படித் திரும்பப் பெறலாம் ?
சில சேவைகளுக்கான முழுச் செலவையும் Medicare ஏற்றுக் கொள்ளலாம், சிலவற்றிற்கு ஒரு குறிப்பிட்டளவு தொகை மட்டுமே வழங்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பங்களில், நோயாளிகள் முழுக் கட்டணத்திற்கும் Medicare மருத்துவ காப்பீட்டு நிதி வழங்கும் தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
குடும்ப மருத்துவர் மற்றும் Medicare திட்டம் இரண்டிலும் பொது மக்களுக்குப் பெரிதும் உதவும் ஒரு செயல் முறை – bulk billing என்பதாகும். இந்த bulk billing செயல் முறையில் இணைந்துள்ள மருத்துவர்களிடம் நீங்கள் சேவை பெற்றால், அந்த சேவைக்கான கட்டணத்தை மருத்துவர் நேரடியாக Medicareஇடமிருந்து பெற்றுக் கொள்வார். கட்டணம் எதையும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. Dr Douglas Hor விளக்குகிறார்.
Seniors and low-income Australians may access additional discounts. Credit: filadendron/Getty Images
உங்கள் மருத்துவரின் அலுவலகத்திலிருந்தே Medicare மருத்துவ காப்பீட்டிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது எளிதாக் இருக்கலாம். அவர்கள் உங்களுக்காகக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். சில நாட்களில், உங்கள் வங்கிக் கணக்கில் Medicare பணத்தை செலுத்தும். அப்படி செய்ய முடியாவிட்டால், நீங்கள் Medicare மருத்துவ காப்பீட்டு பணிமனைக்குச் சென்றோ அல்லது இலகுவாக இணைய வழியாகவோ உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.Justin Bott, Services Australia
மக்கள் வரி கட்டும்போது, Medicare levy என்ற மருத்துவ சேவைகளுக்கான வரி செலுத்துவதன் மூலம் Medicare - மருத்துவக் காப்பீட்டிற்குப் பங்களிக்கின்றனர்.
இதற்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை அவர்களின் வயது மற்றும் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலைகள் போன்ற காரணிகள் தீர்மானிக்கும்.
அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், குறைந்த வருமானமீட்டுபவர்கள், Concession Card - சலுகை அட்டை வைத்திருப்பவர்கள், மற்றும் அரசினால் மூத்த குடிமகன் என ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான (Commonwealth Senior Card) அட்டை வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டவை தவிர கூடுதலாக, PBS என்ற Pharmaceutical Benefits Scheme என்ற திட்டத்தினூடாக மேலும் தள்ளுபடிகளைப் பெறுகின்றனர்.
“ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீங்கள் மருத்துவ தேவைகளுக்குச் செலவு செய்து விட்டீர்கள் என்றால், இந்தத் திட்டங்களின் மூலம் அந்த மேலதிக செலவுகளுக்குத் தள்ளுபடி கிடைக்கும்” என்று Medicare, மற்றும் PBS - Pharmaceutical Benefits Scheme என்ற இரண்டு திட்டங்களையும் விளக்குகிறார் Justin Bott.
“நீங்கள் ஒரு குடும்பமாகப் பதிவு செய்தால், கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் எல்லோரது மருத்துவ செலவுகளும் விரைவில் அந்த எல்லையைத் தாண்டக்கூடும். அதனால் மருந்துகளுக்கும் மருத்துவரைப் பார்ப்பதற்கும் ஏற்படும் செலவு அந்த எல்லையைத் தாண்டிய பின்னர் குறையும்.”
மேலும் அறிய:
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
Medicare திட்டமும் தனியார் மருத்துவக் காப்பீடும்
பல் மருத்துவ சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் சில தடுப்பூசிகள் போன்ற சில மருத்துவ சேவைகளுக்கு Medicare திட்டத்தில் எந்த சலுகையும் கிடையாது. ஆனால், தனியார் மருத்துவக் காப்பீடு பெறுவதன் மூலம் இதற்கான செலவுகளை ஒருவர் குறைத்துக் கொள்ளலாம்.
தனியார் மருத்துவ மனைகளுக்கு நோயாளிகள் செல்வதை தனியார் மருத்துவக் காப்பீடு அனுமதிக்கிறது. அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சோதனைகளை விரைவில் பெறுவதற்கும் தனியார் மருத்துவக் காப்பீடு வழி வகுக்கிறது.
“அரச மருத்துவமனையில், சில சமயங்களில் நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டி வரலாம். ஒரு தனியார் அல்லது அரச மருத்துவமனையில் உங்கள் சொந்த மருத்துவரைத் தேர்ந்தெடுத்து, அறுவை சிகிச்சையை மிகவும் முன்னதாகவே செய்துகொள்ள தனியார் மருத்துவக் காப்பீடு அனுமதிக்கும்” என்கிறார் Dr Douglas Hor.
செவி மடுக்க:
தனியார் மருத்துவக்காப்பீடு வாங்கும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
SBS Tamil
08/10/202107:05
இந் நாட்டிலுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியாதவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
எளிமையான விடயங்களைத் தெரிவிக்க, தான் மொழி மொழிபெயர்ப்பு செயலிகளைப் பயன்படுத்துவதாகவும், மிகவும் சிக்கலான விளக்கங்களுக்கு உரைபெயர்ப்பாளர் சேவையை நம்பியிருப்பதாகவும் Dr Douglas Hor கூறுகிறார்.
Telephone and online virtual consultations have become more common in Australia since the COVID-19 pandemic. Credit: Phynart Studio/Getty Images
Telehealth மற்றும் e-scripts
மருத்துவர்களை நேரில் சந்திக்க முடியாத பல நோயாளிகள், தொலைபேசி வழியாக telehealth மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம்; மருந்துச் சீட்டுகளை, e-script என்று மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று Dr Douglas Hor கூறுகிறார். இந்த சேவைகளும் Medicare மற்றும் PBS திட்டங்களுள் அடங்கும் என்கிறார் அவர். இந்த சேவையைப் பெறுவதற்கு, அந்த மருத்துவரிடம் குறைந்தது 12 மாதங்கள் அந்த நோயாளி சிகிச்சை பெற்று வந்திருக்க வேண்டும்.
“மருத்துவரை நேரடியாகக் காணொலி மூலம் நோயாளிக்கு ஆலோசனை வழங்க telehealth அனுமதிக்கிறது. எங்களால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது, அதேபோல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்க மருந்துச் சீட்டை மின்னஞ்சல் வழியாக அனுப்ப முடிகிறது. அந்த மருந்துச் சீட்டில் QR குறியீடு இருக்கிறது. அவர்கள் அதை மருந்தகத்திற்கு எடுத்துச் சென்று, தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மருத்துவரை நேரே சந்திக்க வேண்டிய அவசியமில்லை” என்று Dr Douglas Hor கூறினார்.
செவிமடுக்க:
Telehealth சேவையைப் பயன்படுத்துவது எப்படி?
SBS Tamil
15/07/202006:15
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.