பல் சுகாதார பராமரிப்பு என்பது பற்கள், ஈறுகள் மற்றும் பிற வாய் திசுக்களை பராமரிப்பதாகும்.
பல் பராமரிப்பு சேவை வழங்கும் வல்லுநர்கள் என்று வரும்போது, நோயாளிகளாக நாம் சந்திப்பவர் பொது பல் மருத்துவர் ஆவார். பொது பல்மருத்துவர்கள் தங்கள் வரையறைக்குட்பட்டு பரந்த அளவிலான பல் சிகிச்சைகளைச் மேற்கொள்ளலாம்.
பொதுவான பல் மருத்துவர்கள் பல் மருத்துவத்தின் பெரும்பாலான அம்சங்களை ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கையாள முடியும் என்று மெல்பனை தளமாகக் கொண்ட ஒரு பொது பல் மருத்துவர் Dr Wessam Atteya கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் சிறப்பு சிகிச்சைகளுக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மற்ற பல் நிபுணர்களிடம் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக அறுவை சிகிச்சை, dental implants, full mouth rehabilitations போன்றவற்றுக்கு நிபுணத்துவம் பெற்ற சிறப்பு பல் மருத்துவரை பார்வையிட வேண்டும் என Dr Wessam Atteya விளக்குகிறார்.
Oral health therapistகளும் உள்ளனர், இவர்கள் பல் சுத்தம் மற்றும் பரிசோதனைகள் போன்ற தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைகளைச் செய்ய பயிற்சி பெற்றவர்கள்.
சரியான வாய் சுகாதார நடைமுறைகள் மற்றும் நோய் தடுப்பு பற்றி நோயாளிகளுக்குக் கற்பிப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
Private practices are where patients pay for treatment out of pocket or with private health insurance. Credit: XiXinXing/Getty Images/Xixinxing
பொது கிளினிக்குகள் பெரும்பாலும் அதிக நோயாளிகளை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக அங்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. கூடுதலாக, நோயாளிகள் தாம் பெறும் சேவைகளுக்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தனியார் கிளினிக் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டது, இங்கு சிகிச்சைக் கட்டணங்களை நோயாளிகள் தமது பாக்கெட்டிலிருந்து அல்லது தனியார் மருத்துவக் காப்பீடு மூலம் செலுத்த வேண்டும் என Dr Wessam Atteya விளக்குகிறார்.
Services Australiaவால் இயக்கப்படும் சுகாதார காப்பீட்டுத் திட்டமான Medicare பல் மருத்துவ சேவைகளுக்கு நிதியளிப்பதில்லை. பதின்வயதினர் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பல் சிகிச்சைகளை மட்டுமே Medicare பரிசீலிக்கும் என Dr Wessam Atteya கூறுகிறார்.
வாழ்க்கையின் ஆரம்பத்தில் மோசமான வாய் சுகாதாரத்தை பேணுபவர்கள் வயதுசென்றவுடன் வாய் சம்பந்தப்பட்ட பல நோய்களை சந்திக்க நேரிடுமென Dr Wessam Atteya சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்குத் தேவையான பல் சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்வது மிக முக்கியமானது.
இதற்கு Child Dental Benefits Scheduleஐ பயன்படுத்திக்கொள்ளலாம் என Services Australiaவின் Community Information Officer Justin Bott தெரிவித்தார்.
ஒரு குழந்தை அல்லது பதின்மவயதினர் தமது முதலாவது தகுதியான பல் மருத்துவ சேவையைப் பெறும்போது Child Dental Benefits Schedule இன் two-year cap- இரண்டு வருட வரம்பு தொடங்குகிறது, மேலும் அந்தக் காலகட்டம் முழுவதும் அவர் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
Dental treatment in Australia is relatively expensive compared to other countries. Credit: Tom Werner/Getty Images
அனைத்து ஆஸ்திரேலிய குழந்தைகள் மற்றும் பதின்மவயதினரும் Child Dental Benefits Schedule ஐ பயன்படுத்த முடியாது. இதற்கு கடுமையான தகுதி அளவுகோல்கள் உள்ளன.
Child Dental Benefits Scheduleஐப் பயன்படுத்த உங்கள் பிள்ளைக்கு 17 வயது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்க வேண்டும் என்றும், Medicareக்கு தகுதி பெற வேண்டும் என்றும் Justin Bott விளக்குகிறார்.
Check-ups, x-rays, cleaning, fissure sealing, fillings, root canals, மற்றும் extractions ஆகியவற்றை Child Dental Benefits Schedule உள்ளடக்குகிறது. ஆனால் braces அல்லது cosmetic பல் சீரமைப்புகளுக்கான orthodontics சேவையை இது உள்ளடக்காது.
Child Dental Benefits Schedule -ஐ பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை சிகிச்சையைப் பெறுவதற்கு முன்பு உங்கள் பல் மருத்துவருக்கு தெரியப்படுத்துவது முக்கியமாகும்.
உங்கள் MyGov கணக்கின் மூலம் உங்கள் குழந்தைக்கு இன்னமும் எவ்வளவு டொலர்களுக்கு Child Dental Benefits Scheduleஐ பயன்படுத்தலாம் என்பதை எப்போதும் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் பல் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது என்று சொல்வது நியாயமான கூற்றுத்தான் என்கிறார் Dr Wessam Atteya.
வணிகத்தை இயக்குவதற்கான செலவுகள் மற்றும் பிற காரணிகளால் இங்கு பல் சிகிச்சை அதிக விலை உயர்ந்ததாக காணப்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
உங்கள் பற்களை கவனித்துக்கொள்வதே பல் சிகிச்சைக்கு ஆகும் அதிக செலவை தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும். சிகிச்சையை விட வருமுன் காப்பது எப்போதும் சிறந்தது.
For more information about public dental services for children and adults, emergency dental care, and specific specialist procedures in each state or territory.
- Australian Capital Territory:
- New South Wales:
- Northern Territory:
- Queensland:
- South Australia:
- Tasmania:
- Victoria:
- Western Australia:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.