வாடகைச் செலவுகளைச் சேமிப்பதற்காக அதிகமான மக்கள் வீட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்வதால், Shared housing-பகிரப்பட்ட வீடுகள் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
நீங்கள் Shared housingஐ தெரிவுசெய்யும்போது என்ன முக்கிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சாத்தியமான மோசடிகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது போன்ற தகவல்களை இந்த விவரணத்தில் பார்ப்போம்.
வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், அதிகமான மக்கள் shared accommodation-ஐ நாடுகின்றனர்.
15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட- ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத- நபர்கள் ஒன்றாக வசிப்பதையே shared house -பகிரப்பட்ட வீடு என்பதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் வரையறுக்கிறது.
Shared housing பற்றி விளக்குகிறார் பகிரப்பட்ட தங்குமிடங்களைத் தேடும் நபர்களை இணைப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஆன்லைன் தளமான Flatmatesஇன் Community Manager Claudia Conley.
It's not only younger people who are seeking shared accommodation. Credit: Klaus Vedfelt/Getty Images
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செலவுகளைக் குறைக்கவும், பட்ஜெட்டுக்கு ஏற்ற மாற்று வழிகளைத் தேடவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அதிகரித்த வட்டி விகிதங்கள் காரணமாக shared housing கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு பிரபலமடைந்துள்ளது.
கணிசமான நிதி நெருக்கடிகள் காரணமாக பெரும்பாலும் பலர் shared housingக்கு முன்னுரிமை அளித்தாலும் இதன் மூலம் பணத்தை சேமிப்பதற்கும் வழியேற்படுவதாக கூறுகிறார் Claudia Conley.
Rising cost of living means that more people are seeking to share a house with others. Credit: Rafael Ben-Ari/Getty Images
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் வாடகை வீடுகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்வதாகவும், அதற்குப் பதிலாக shared accommodationஐ தெரிவுசெய்வதாகவும் குறிப்பிடுகிறார் விக்டோரியாவை தளமாகக் கொண்ட residential specialist Verindar Kaindal.
போட்டித்தன்மை வாய்ந்த வாடகை சந்தையில் shared housingஐ மிகவும் சாத்தியமான விருப்பத்தெரிவாக மாற்றுவதில் supply and demand எனப்படுகின்ற கேள்வியும் நிரம்பலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என Verindar Kaindal சுட்டிக்காட்டுகிறார்.
Navigating the shared housing market can be challenging, especially with the increasing prevalence of scams targeting potential tenants.
அதேநேரம் ஒரு வீட்டு உரிமையாளர் அதில் வசித்துக்கொண்டு மற்றவர்களுடன் வாடகைபெற்று அந்த வீட்டைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கான சமையலறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உரியமுறையில் வழங்கவேண்டியது அவசியமாகும்.
கருத்து வேறுபாடுகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வது, சம்பந்தப்பட்ட அனைவரும் shared housingஐ அமைதியாகவும், இனிமையாகவும் தொடர்வதற்கு வழிவகுக்கும்.
வாடiதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் எந்தவிதமான தகராறையும் தவிர்க்க ஏதுவாக அவர்களுக்கு இடையே உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் எழுத்துப்பூர்வமாக வைத்திருக்க வேண்டும் என்று Claudia Conley அறிவுறுத்துகிறார்.
Serious mature couple receive professional advice Credit: JohnnyGreig/Getty Images
நேரில் சந்திக்காமல் ஆன்லைனில் சேவைகளை வழங்கும் நபர்களுடன் தொடர்புகளைக் கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது.
ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னரேயே தமது தங்குமிடங்களை ஒழுங்கமைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தாம் தெரிவுசெய்த தங்குமிடத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் தொடர்பு கொள்ளும் நபரின் அடையாளம் ஆகிய இரண்டையும் சரிபார்க்க வேண்டியது அவசியம் என Claudia Conley வலியறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.