ஆஸ்திரேலியாவின் வெப்பமான காலநிலை ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய மின்னாற்றலை வழங்குகின்றது. இந்தப் பின்னணியில் சூரிய மின்னாற்றல் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மின்சார விநியோகத்தில் அதிகளவில் முக்கிய பங்காளி ஆகியுள்ளது.
2021-22 காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் சூரிய மற்றும் காற்றாலைகளால் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி முதன்முறையாக household electricity consumption - வீட்டு மின் நுகர்வைவிட அதிகமாக இருந்ததாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் கூறுகின்றன. இது நாட்டின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் நிலையான ஆற்றல் உற்பத்தி நடைமுறைகளை நோக்கிய பரந்த மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த விவரணத்தில் உங்கள் வீட்டில் சோலார் அமைப்பை எவ்வாறு நிறுவுவது என்பதைப்பற்றி அறிந்துகொள்வோம்.
ஆஸ்திரேலியாவில் சூரிய மின்னாற்றலுக்கான தேவை தொடர்ந்தும் அதிகரித்து வரும் அதேநேரம் வழக்கமான மின்சாரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் செலவு குறைந்த தெரிவாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மலிவானது மட்டுமல்லாமல் பிரதான மின் வலையமைப்பில் ஏற்படும் அழுத்தத்தையும் நெரிசலையும் இது குறைக்கிறது என்கிறார் சூரிய மின்னாற்றல் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பள்ளியின் இணைப் பேராசிரியர் Dr Archie Chapman.
Both landlords and tenants have the option to install solar power; however, tenants may find it less advantageous, as the costs are difficult to recoup within a shorter timeframe. Credit: Cavan Images / Robert Niedring p/Getty Images/Cavan Images RF
இருப்பினும் Energy ஆஸ்திரேலியாவின் அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவின் ஆற்றல் உற்பத்தியில் 60 சதவீத பங்கு இன்னமும் நிலக்கரிக்கே உள்ளது.
நிலக்கரி மீது நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில் ஆஸ்திரேலியா இப்போதுதான் சூரிய மின்னாற்றலை நோக்கி திரும்புகிறது என குறிப்பிடுகிறார் சோலார் விக்டோரியாவின் CEO Stan Krpan.
இந்நிலையில் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தும் நடவடிக்கை நாடெங்கும் அதிகரித்து ஆஸ்திரேலியாவின் ஆற்றல் பரப்பில் சூரிய மின்னாற்றல் ஒரு முக்கிய பங்காளியாக மாறியுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் கூரையில் சோலார் பேனல்களை நிறுவுகிறார்கள். இது வாடகைதார்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பயனடைய அனுமதிக்கிறது என்கிறார் Stan Krpan.
சோலார் பேனல்களை நிறுவுவதற்கு ஆகும் செலவை குறுகிய காலத்தில் திரும்பப் பெற முடியாது என்பதால், வாடகைதாரர்கள் அவற்றை நிறுவுவதற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
Rebates and schemes are available in different Australian states and territories. Source: Moment RF / owngarden/Getty Images
உதாரணமாக, சோலார் விக்டோரியா வீட்டுக் கூரை மீது பொருத்தும் சோலார் ஒன்றுக்கு $1,400 தள்ளுபடி வழங்குகிறது. கூடுதலாக அவர்கள் நான்கு வருடங்கள் வரைக்குமான வட்டியில்லா கடனையும் வழங்குகிறார்கள்,
இதுதவிர அவர்கள் வீட்டுக்கான பேட்டரியை வாங்குவதற்கு $8,800 வட்டியில்லா கடனையும் வழங்குகிறார்கள்.
இதேபோல திட்டங்கள் ஏனைய மாநிலங்களிலும் இருப்பதாக சொல்கிறார் Stan Krpan.
2050க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலக்கினை நோக்கி ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் முன்னேறி வருகின்றன.
பாரிஸ் உடன்படிக்கையுடன் இணைந்த இந்த இலக்கு, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் கரியமில வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை கட்டாயமாக்குகிறது.
சூரிய மின்னாற்றல் தொடர்பில் உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள தகவலுக்கு தொடர்புடைய இணையதளங்களைப் பார்வையிடவும் அல்லது energy.gov.auக்குச் சென்று உங்களுக்குக் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களைக் கண்டறியவும்.
For your state, please visit the below links:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.