நமது வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிப்பதற்கான தேவை அதிகரித்து வருவதால், பெருமளவிலான மக்கள் வங்கிக் கடனை நடுகின்றனர். குறிப்பாக personal loanஐ பெறுகின்றனர்.
இருப்பினும், வங்கிகளுடன் எந்தவொரு கடன் ஒப்பந்தத்திலும் இறங்குவதற்குமுன், கவனத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன.
Personal loan என்பது நீங்கள் வங்கியிலிருந்து ஒரு தொகையக் கடனாகப்பெற்று, அதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் தெரிவை வழங்குகிறது.
விடுமுறை, திருமணம், வீட்டைப் புதுப்பிப்பதற்கு மற்றும் கார் வாங்குவதற்கு என பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஒருவர் personal loanஐ நாடிச்செல்வதாகக் கூறுகிறார் ASIC-இன் Moneysmart குழுவைச் சேர்ந்த Andrew Dadswell.
Credit report form on a desk with other paperwork. There are also a pen, glasses and a calculator on the desk Credit: courtneyk/Getty Images
Personal loan க்கு அனைவரும் தகுதியுடையவர்கள் அல்ல, எனவே கடன் வழங்குபவர்கள் விண்ணப்பதாரர்களை அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மதிப்பிடுகின்றனர். கூடுதலாக, ஒவ்வொரு கடன் வழங்குநருக்கும் வெவ்வேறு நிபந்தனைகள் இருக்கும்.
கடன் வழங்குபவர்கள் ஆஸ்திரேலியாவில் உங்களது கடன் வரலாற்றை மட்டுமே பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க, அவர்கள் உங்களது credit scoreஐப் பயன்படுத்துகின்றனர்.
இது ஆஸ்திரேலியாவில் உங்களது கடன் வரலாற்றின் தகவல்தொகுப்பு என்று சொல்கிறார் Finder நிறுவனத்தின் நிதி நிபுணரான Amy Bradney-George.
உங்களது credit score பொதுவாக 0 தொடக்கம் 1000 க்கு இடையில் இருக்கும் எனவும் உங்கள் கடனை பொறுப்புடன் நிர்வகிக்கும் திறனுக்கான அளவுகோலை இது கடன் வழங்குநர்களுக்கு வழங்குகிறது எனவும் அவர் கூறுகிறார்.
Credit: Jacobs Stock Photography Ltd/Getty Images
ஒரே நேரத்தில் பல கடன் வழங்குனர்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவ்வாறு செய்வது உங்கள் credit scoreக் குறைக்கலாம், ஏனெனில் நீங்கள் நிதி தொடர்பான அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
கடனுக்காக விண்ணப்பிப்பதற்கு முன், கடன் வழங்குபவர்கள் தொடர்பிலும் அவர்களின் வட்டி விகிதங்கள் மற்றும் தொடர்புடைய கட்டணங்கள் ஆகியவற்றையும் ஆராயுமாறு Andrew Dadswell பரிந்துரைக்கிறார்.
மேலும், கடன் காலத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துகிறார்.
Moneysmart இன் personal loan calculator ஊடாக உங்களது கடன் தொகை மற்றும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் நீங்கள் மாதாந்தம் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை கணக்கிடலாம்.
வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு personal loanகளை வழங்குகின்றன.
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய வகையான personal loan உள்ளன. ஒன்று secured மற்றது unsecured.
கார் போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கு secured கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
You can always discuss financial hardship options with your lender if times get tough. Source: iStockphoto / Atstock Productions/Getty Images/iStockphoto
Secured loanகள் பொதுவாக நிலையான வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கும், மேலும் உங்கள் சொத்தை நீங்கள் காப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.
இரண்டாவது தெரிவான unsecured loan, நிதியை எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு சொத்தை security ஆக வழங்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் வட்டி விகிதம் பொதுவாக அதிகமாக இருக்கும்.
நீங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் அதேநேரம் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியும் என்று உறுதியாக நம்பினால், நீங்கள் விரும்பும் கடன் வழங்குநரிடம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன்போது தேவையான ஆவணங்களையும் நீங்கள் இணைக்கலாம்.
இருப்பினும், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது பொதுவான ஒன்று என Finder நிறுவனத்தின் நிதி நிபுணரான Amy Bradney-George கூறுகிறார்.
கடன் வழங்குநர் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பிடும்போது, உங்கள் வருமானம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமானதாக இல்லை என்று அவர்கள் கருதினால், அல்லது நீங்கள் நிலையற்ற வேலையில் இருந்தால், அல்லது அந்த வேலையில் நீங்கள் சமீபத்தில்தான் இணைந்திருந்தீர்கள் என்றால், இவற்றைக் காரணங்களாக வைத்து உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படக்கூடும் என்கிறார் அவர்.
நீங்கள் ஒரு personal loanஐப் பெறுவதற்குத் தகுதிபெற்றிருந்தாலும் உங்கள் நிதி நிலைமைகள் மாறுவதை நீங்கள் காணலாம்.
சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும், மேலும் pயலனயல டழயளெ அல்லது உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிப்பது போன்ற விரைவான தீர்வுகள் உங்கள் கடனை மேலும் அதிகரிக்கலாம்.
நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டால், உங்கள் கடன் வழங்குநருடன் நிதி நெருக்கடி தொடர்பான தெரிவுகளைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம். இதனடிப்படையில் அவர்கள் உங்கள் கடனின் விதிமுறைகளை மாற்றலாம்.
பணப் பிரச்சினைகளை அனுபவிக்கும் எவரும் ஒரு நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளுமாறு ஊக்குவிக்கிறார் Moneysmart ஐச் சேர்ந்த Andrew Dadswell.
மேலும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் போலவே, எப்போதும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Moneysmart இணையதளம், மோசடிகளை அடையாளம் காணவும், மோசடிக்காரர்கள் உங்களையும் இலக்குவைத்துள்ளதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் உதவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.