சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பதிப்புரிமையை மீறுகிறீர்களா?

When you post writing, images, video and music to social media it’s automatically covered by copyright.

When you post writing, images, video and music to social media it’s automatically covered by copyright. Credit: Yui Mok/PA

வேறொருவரின் வீடியோ அல்லது இசையை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்களா? நீங்கள் அவர்களின் பதிப்புரிமையை மீறியிருக்கலாம்.


Copyright-பதிப்புரிமைச் சட்டம் சமூக ஊடகங்களில் நாம் எதைப் பயன்படுத்தலாம் மற்றும் பகிரலாம் என்பதைக் கட்டுப்படுத்துகிறது. பதிப்புரிமை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது மோசமான சூழ்நிலைகளையும் சாத்தியமான கடுமையான விளைவுகளையும் தவிர்க்க உதவும்.

பதிப்புரிமை என்பது எழுத்து, புகைப்படம், இசை மற்றும் வீடியோக்கள் போன்ற படைப்புகளுக்குப் பொருந்தும் ஒரு வகையான சட்டப் பாதுகாப்பு. அந்தப் படைப்பை தான் விரும்பியவாறு பயன்படுத்துவதற்கான உரிமையை இது படைப்பாளருக்கு வழங்குகிறது.

இது ஒருவரின் படைப்பை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது.

ஒரு படைப்பாளரால் குறித்த படைப்பு உருவாக்கப்படும்போது automatic- தானாகவே பதிப்புரிமை வந்துவிடும் எனவும் அதனை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் விளக்குகிறார் சமூக ஊடக விவகாரங்களுக்கான வழக்கறிஞர் Tegan Boorman.

ஒவ்வொரு சமூக ஊடக தளமும் கணக்கு வைத்திருப்பவர் அதில் சேரும்போது ஒப்புக் கொள்ளும் அதன் சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது.

இதில் பொதுவாக தளத்தின் sharing -பகிர்வு செயல்பாட்டை ஒப்புக்கொள்வதும் அடங்கும். ஒரு content creator தனது பதிப்புரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் அதேநேரம் அந்த தளத்தில் மற்றவர்கள் தனது படைப்பை பகிர்வதற்கும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

Facebook மற்றும் Instagram இரண்டும் Metaவுக்கு சொந்தமானவை என்பதால், இந்த தளங்களில் உள்ளடக்கத்தைப் பகிர உங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் மற்றொரு கணக்கு வைத்திருப்பவரின் படைப்பைப் பகிர்ந்து கொண்டால், குறித்த தளம் தானாகவே அவர்களுக்குரிய credit-ஐ வழங்கும்.

இதேவேளை ஒருவரின் உள்ளடக்கத்தைப் பகிர முடியாதபடி settings-ஐ மாற்றியமைக்கலாம்.
copyright concept, author rights, intellectual property
Content can be shared under fair dealing or Creative Commons licences. Source: iStockphoto / anyaberkut/Getty Images/iStockphoto
இருப்பினும், ஒருவரின் படைப்பொன்றை வெறுமனே share செய்வதை விடுத்து அதனை download செய்து பின் உங்கள் சமூக ஊடகங்களில் அதனைப் பதிவேற்றுவது சரியல்ல என்று Tegan Boorman கூறுகிறார்.

ஓவியர் மற்றும் visual arts ஆசிரியரான Paul Murray பதிப்புரிமைச் சட்டத்தை மீறி, தனது கலைப்படைப்பு தனது அனுமதியின்றி Facebookஇல் பகிரப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

நீங்கள் ஒருவரின் படைப்பைப் பகிர விரும்பினால், அதை உருவாக்கியவருக்கான credit-ஐக் கொடுப்பதற்காக அவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது சிறந்தது. அவர்களை வழக்கமாக ஏதேனுமொரு தளம் வழியாகத் தொடர்பு கொள்ளலாம், அல்லது அவர் ஒரு influencerஆக இருந்தால், அவரது நிர்வாகத்தை தொடர்புகொள்ளலாம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குறித்த படைப்பாளி தனது சமூகவலைத்தள username உடன் அதை tag செய்யுமாறு உங்களிடம் கேட்பார்.

இதேவேளை ஆஸ்திரேலிய பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் சில விதிவிலக்குகள் உள்ளன, அவை வேறொருவரின் உள்ளடக்கத்தை அவர்களின் பதிப்புரிமையை மீறாமல் பயன்படுத்த உங்களை அனுமதிக்கின்றன.

இந்த விதிவிலக்குகளில் ஒன்று ‘fair dealing’ சட்டத்தின் கீழ் அடங்குவதாக விளக்குகிறார் Sprintlaw legal serviceஇன் இணை நிறுவனர் Alex Solo.

ஒருவரின் படைப்பு உள்ளடக்கத்தை Creative Commons licence என்று அழைக்கப்படுவதன் கீழ் பகிர்வதும் பாதுகாப்பானது. இது ஆன்லைனில் காணப்படும் copyright-protected உள்ளடக்கத்தின் தொகுப்பாகும்.

குறித்த உள்ளடக்கத்தை அனுமதி பெறாமல் பயன்படுத்தினாலும், Creative Commons licenceஇன் கீழ் படைப்பாளருக்கு இன்னமும் பதிப்புரிமை உள்ளதால் படைப்பாளருக்கான credit-ஐ நீங்கள் கொடுக்க வேண்டும்.

பல்வேறு வகையான உரிமங்கள் உள்ளதால் அவை உங்கள் நோக்கத்துடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமென Alex Solo விளக்குகிறார்.
Artist taking a picture of her "work in progress" drawing
Take progress shots of your work. Credit: LeoPatrizi/Getty Images
ஒரு Creative Commons படத்தைப் பயன்படுத்த விரும்பினால் முதலில், Google imageக்கு சென்று பின் ‘tools’ என்பதற்குச் சென்று பின்னர் ‘Creative Commons Licences’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சமூக ஊடகத்தில் உங்கள் வீடியோக்கள் மற்றும் படங்களுடன் நீங்கள் சேர்க்கும் இசைக்கும் கூட பதிப்புரிமை பொருந்தும்.

இசையைப் பயன்படுத்துவதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்னமும் நிலவுவதாக Alex Solo கூறுகிறார்.

நீங்கள் ஒரு content creatorஆக இருந்தால் என்ன செய்வது? மற்றவர்கள் உங்கள் பதிப்புரிமையை மீறுவதை எவ்வாறு தடுக்க முடியும்?

உங்கள் சமூக ஊடக பதிவுகளில் ஒரு வட்டத்திற்குள் பதிப்புரிமை சின்னமான C என்ற எழுத்தை சேர்ப்பதன் மூலம் - அல்லது 'எனது அனுமதியின்றி பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பைச் சேர்ப்பதன் மூலம் அது உங்கள் படைப்பு என்பதை மக்களுக்கு நினைவூட்டலாம்.

Watermarking செய்வது போன்ற உத்தியையும் கையாளலாம் என்கிறார் Paul Murray.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், பதிப்புரிமை மீறல்கள் எல்லா நேரங்களிலும் நிகழ்கின்றன.

யாராவது உங்கள் பதிப்புரிமையை தீவிரமாக மீறியதாக நீங்கள் நம்பினால், முதலில் சட்ட ஆலோசனையைப் பெறாமல் உங்கள் சமூக ஊடகங்களில் மீறல் நடந்ததாகக் கூறுவதைத் தவிர்க்குமாறு Tegan Boorman அறிவுறுத்துகிறார்.

இதேவேளை பதிப்புரிமை மீறல்களை அறிக்கையிடுவதற்கு சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளங்களும் உங்களுக்கு உதவக்கூடும்.
Copyright sign
Copyright concept Credit: JLGutierrez/Getty Images
தெரிந்தோ அல்லது தெரியாமலோ பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவோருக்கு- குறிப்பாக அந்த பதிப்புரிமை மீறல் மூலம் லாபம் ஈட்டியிருந்தால் -பதிப்புரிமை மீறல் சட்ட நடவடிக்கை மற்றும் நிதி அபராதங்கள் என கடுமையான தண்டனைகள் கிடைக்கலாம்.

பதிப்புரிமை உள்ள உங்கள் படைப்புகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு Google reverse image searches போன்றவற்றைப் பயன்படுத்தி அவற்றைக் கண்காணித்துக்கொள்வது முக்கியம் என Alex Solo வலியுறுத்துகிறார்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our
page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to 

Share