பல்வேறு படைப்புக் குழுக்களும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதற்கு இந்த அருங்காட்சியகம் இடம் கொடுத்துள்ளது. குறிப்பாக, டிசம்பர் பத்தாம் நாள் சனிக்கிழமை, சிட்னியின் தமிழ் சமூகத்தின் கொண்டாட்ட நாளாகும்.
அருங்காட்சியகத்தின் Paschal Daantos Berry, நிகழ்வின் இணைத் தயாரிப்பாளர் ஜீவா பார்த்திபன், ஆஸ்திரேலிய தமிழ்க் கலையைச் சேர்ந்த லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் முத்தரசு கோச்சடை, சம்ஸ்க்ருதி நடனப் பள்ளியின் ஹம்சா வெங்கட், கவிஞர் ஸ்ரீஷா ஸ்ரீதரன் ஆகியோர், இந்த நிகழ்வில் தங்களது பங்களிப்பு குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விரிவாகப் பேசுகிறார்கள்.
———
———
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.