ஜனவரி 26 பூர்வீகக்குடி மக்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?

BRISBANE INVASION DAY RALLY

Invasion Day Rally, Brisbane 2024. Source: AAP / JONO SEARLE

ஆஸ்திரேலியாவில், ஜனவரி 26 தேசிய தினமாக கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இது பூர்வீகக்குடி மக்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பது குறித்த விவரணம்.


ஆஸ்திரேலியாவில், ஜனவரி 26 தேசிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்தத் தேதி சர்ச்சைக்குரியது.

ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வந்த பல புலம்பெயர்ந்தோர் இந்த நாளின் பின்னணியில் உள்ள முழு கதையையும் புரிந்துகொள்வது முக்கியம்.

சில பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு, ஜனவரி 26 அவர்களின் வரலாற்றின் ஒரு வேதனையான பகுதியின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் தப்பிப்பிழைத்தல், அந்நியரின் ஊடுருவல் மற்றும் துக்கத்தை குறிக்கிறது.

ஜனவரி 26 அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலிய தினம், நாட்டின் தேசிய நாள். ஆனால் பூர்வீகக்குடி மக்கள் மற்றும் இன்னும் பல ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல.

இந்த நாள் தனக்கு ஒரு இருண்ட நாள் என்கிறார் Gamilaraay, Kooma மற்றும் Murrawari activist மற்றும்podcaster Boe Spearim.
BRISBANE INVASION DAY RALLY
Invasion Day Rally in Brisbane, 2024 Source: AAP / JONO SEARLE
ஜனவரி 26 ஆஸ்திரேலியாவில் காலனித்துவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 1788 ஆம் ஆண்டு Sydney Coveவில் பிரிட்டன் நாட்டவர் முதன்முதலில் Union Jack கொடியை ஏற்றிய நாள் இது.

ஆஸ்திரேலியா தினம் 1935 முதல் ஜனவரி 26 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது, 1994 இல் நாடு தழுவிய பொது விடுமுறையாக இது மாறியது.

சில ஆஸ்திரேலியர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்பிக்யூக்களை ஏற்பாடு செய்வதன் மூலமோ, கடற்கரைக்குச் செல்வதன் மூலமோ அல்லது நாடு முழுவதும் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளில் வாணவேடிக்கைகளைப் பார்ப்பதன் மூலமோ கொண்டாடுகிறார்கள். பல குடியுரிமை வழங்கும் விழாக்களும் இந்த தேதியில் நடத்தப்படுகின்றன.

ஆனால் ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடப்படுவதை எதிர்க்கும் பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், 1938 முதல் இதனை "துக்க நாள்" என்று அழைக்கின்றனர். ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட மறுக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்லும் அதேநேரம் தேசிய விடுமுறையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

ஜனவரி 26 ஆம் தேதி பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு ஏற்றதல்ல என்று கூறும் Yorta Yorta பெண்மணியும் Wollongong பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான Dr Summer May Finlay, ஏனெனில் அந்தத் தேதி அவர்களது நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அவர்களின் கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டதன் தொடக்கத்தைக் குறிக்கிறது என்கிறார்.
MELBOURNE INVASION DAY RALLY
People gather outside Victorian Parliament for the Invasion Day rally, 2024. Source: AAP / Diego Fedele
நில அபகரிப்பு, படுகொலைகள், அறிமுகப்படுத்தப்பட்ட நோய்கள் மற்றும் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டமை ஆகியவற்றை எதிர்கொண்ட பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்களுக்கு பிரிட்டிஷ் காலனித்துவம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபாடு, மோசமான சுகாதார நிலைமைகள் உள்ளிட்ட காலனித்துவத்தின் விளைவுகள் இன்றும் அவர்கள் மத்தியில் உணரப்படுகின்றன.

அனைத்து ஆஸ்திரேலியர்களும் தங்கள் நாட்டின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் Dr Summer May Finlay.

பூர்வீகக்குடி மக்கள் தமது நீதிக்காக போராடிவரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தோர் பலர் இதேபோன்ற பின்னணிகளைக் கொண்டிருப்பதாகவும் எனவே அவர்கள் பூர்வீகக்குடிமக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்பது தனது விருப்பம் எனவும் Boe Spearim சொல்கிறார்.

ஜனவரி 26 விவகாரம் பூர்வீகக்குடி மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பூர்வீகக்குடியினர் மற்றும் பூர்வீகக்குடியினர் அல்லாத ஆஸ்திரேலியர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Reconciliation Australiaவின் நிர்வாகக்குழு உறுப்பினரான Rana Hussain.
New Australian citizens
New Australian citizens, Broken Hill, NSW Source: AAP / STUART WALMSLEY
சமீபத்திய கருத்துக் கணிப்புகள், பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலிய தினத்தை கொண்டாட விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இத்தேதியை மாற்றுவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் பரந்தளவில் விவாதம் நடைபெறுகிறது.

தேதியின் வரலாற்றை பிரதிபலிக்கும்வகையில், சில ஆஸ்திரேலியர்கள் அதை "படையெடுப்பு நாள்" அல்லது "தப்பிப்பிழைத்த நாள்" என்று குறிப்பிடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக பூர்வீகக்குடி குழுக்கள் ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் அணிவகுப்புகள், பேரணிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.

இந்நிகழ்வுகளில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என Dr Summer May Finlay தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகள் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் அளிக்கின்றன என்று கூறுகிறார் Rana Hussain.

பிரிஸ்பேனில் சில அணிவகுப்புகளை ஏற்பாடு செய்யும் Boe Spearim அவை தனக்கு உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிப்பதாக கூறுகிறார்.

ஜனவரி 26ம் தேதியைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைப் புரிந்துகொண்டு, பல உள்ளூர் கவுன்சில்கள் இப்போது ஜனவரி 26 அன்று குடியுரிமை வழங்கும் விழாக்களை நடத்துவதை நிறுத்திவிட்டன.

ஆஸ்திரேலியா தினம் ஒரு தேசிய பொது விடுமுறையாகக் குறிக்கப்படுகின்ற பின்னணியில் அது வார இறுதியில் வந்தால், தொடர்ந்துவரும் திங்கட்கிழமை பொது விடுமுறையாக இருக்கும். ஆனால் அன்றைய தினம் வேலை செய்ய விரும்புபவர்கள் அதை வேலை நாளாக தெரிவுசெய்து அதற்கு பதிலாக மற்றொரு நாள் விடுமுறை எடுக்கலாம் என்ற தெரிவை சில பணியிடங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவதாக Dr Summer May Finlay கூறுகிறார்.
இரண்டாம் தலைமுறை குடியேறிகளாக, பல புலம்பெயர்ந்தோர் தங்கள் புதிய அடையாளத்தைக் கொண்டாட விரும்புவது ஏன் என்பதை தான் புரிந்துகொள்வதாகவும், ஆனால், எல்லோரையும் உள்ளடக்கி அதைக் கொண்டாடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அனைத்து ஆஸ்திரேலியர்களும் நம் நாட்டின் உண்மையான வரலாற்றைப் பற்றி தீவிரமான உரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் Rana Hussain கூறுகிறார்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to 

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share