ஆஸ்திரேலியா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் ஒரு பங்காளியாகும். இதன்காரணமாக மத சுதந்திரத்திரத்திற்கு இந்நாடு முக்கியத்துவம் வழங்குகிறது.
இருப்பினும், மத பாகுபாடு தொடர்பான சட்டமுன்வடிவு - ஐ நிறுவுவதற்கான செயல்முறைகள் இன்னும் நடந்து வருகின்றன. எனவே, மத உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளுடன்கூடிய ஒரே மாதிரியான ஆஸ்திரேலிய சட்டம் எல்லா இடங்களிலும் இல்லை.
வேலைகளைப் பொறுத்தவரை இன் கீழ் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய பாதுகாப்புச்சட்டங்கள் உள்ளன, ஆனால் அவை வரம்பிற்குட்பட்டவை.
Complaints about workplace religious discrimination includes discrimination because of the lack of a religious belief. Credit: SDI Productions/Getty Images
Fair Work Actஇன் கீழ், ஒரு பணியாளரின் மதத்தின் காரணமாக அவருக்கு எதிராக பாதகமான நடவடிக்கை எடுப்பதிலிருந்து முதலாளிகள் தடைசெய்யப்படுகின்றனர். ஆனால் ஒருவரது மதத்தின் அடிப்படையில் அவருக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அதனை நிரூபிப்பது கடினம் என Karina Okotel கூறுகிறார்.
அதேநேரம் சக பணியாளர்களுக்கு இடையே ஏற்படுவது உட்பட, பணியிடத்தில் உள்ள மற்ற வகையான மதப் பாகுபாடுகள் இச்சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
Some jurisdictions, including Queensland, Victoria and the ACT also have protections for freedom of religion in their respective Human Rights Acts. Credit: coldsnowstorm/Getty Images
இந்த ஆணைக்குழுவின் பணியானது, இரு தரப்பினரையும் விசாரித்து ஒரு தீர்வை எட்ட முயற்சிப்பதுடன் பரிந்துரைகளை வழங்குவதாகும்.
மாநில மற்றும் பிராந்திய மட்டத்தில், anti-discrimination பாகுபாடு-எதிர்ப்புச் சட்டங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன, ஆனால் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொள்பவர் தான் வாழும் பகுதியிலுள்ள யவெi-னளைஉசiஅiயெவழைn அமைப்பில் புகார் செய்யலாம்.
உதாரணமாக, விக்டோரியாவில் என்றால் புகார்களை Victorian Equal Opportunity and Human Rights Commission (VEOHRC)இல் சமர்ப்பிக்கலாம்.
The kinds of mediation outcomes are “limitless, because it's really what the two parties are willing to agree to”. Credit: CihatDeniz/Getty Images
ஒரு பணியிட பாகுபாடு மாநில அல்லது பிராந்திய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டிருந்தால், குறிப்பிட்ட நபர் அந்த விடயத்தை சட்டப்பூர்வமாக தொடரலாம்;.
இதேவேளை பாகுபாடு குறித்த சட்டம் சில விதிவிலக்குகளை அனுமதிக்கலாம், அதாவது சில சமயங்களில் மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவது சட்டத்திற்கு எதிரானது அல்ல.
உதாரணமாக, விக்டோரியாவில், மத அடிப்படையிலான நிறுவனங்கள் சில நிபந்தனைகளின் கீழ் ஊழியர்களைப் பணியமர்த்தும்போது பாகுபாடு காட்டுவது அனுமதிக்கப்படுகிறது என விளக்குகிறார் Aimee Cooper.
“Health and safety issues are grounds on which employers can legitimately infringe upon religious practice or religious observance, in the form of religious dress for example,” Mr Carroll explains. (Getty) Credit: Maskot/Getty Images
இந்தப் பின்னணியில் மதரீதியாக தனது ஊழியர்களுக்கு பாகுபாடு காட்டுவதைத் தவிர்க்க விரும்பும் முதலாளிகள் Fair Work Act மற்றும் அந்தந்த மாநில மற்றும் பிராந்திய சட்டங்களின் கீழ் தமது பொறுப்புக்களை கடைப்பிடிப்பதன் மூலமும் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் இதை அடைய முடியும் என - Justin Carroll வலியுறுத்துகிறார்.
இதேவேளை ஒருவர் தான் அனுபவிப்பது மத அடிப்படையிலான பாகுபாடா அல்லது இன அடிப்படையிலான பாகுபாடா அல்லது பிற வகையைச் சார்ந்ததா என்ற குழப்பம் ஏற்பட்டால் தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எப்போதும் சட்ட ஆலோசனையைப் பெறுவது அவசியம் என கன்பராவிலுள்ள Racial & Religious Discrimination Legal Serviceஇன் முதன்மை வழக்கறிஞர் Karina Okotel ஊக்குவிக்கிறார்.
மாநில/பிராந்திய அளவில் மதப் பாகுபாடு தொடர்பில் புகார் செய்வது பற்றிய தகவல்கள்:
ACT | ACT Human Rights Commission | |
NSW | Anti-Discrimination Board of NSW | |
NT | Northern Territory Anti-Discrimination Commission | |
QLD | Queensland Human Rights Commission | |
SA | South Australian Equal Opportunity Commission | |
TAS | Equal Opportunity Tasmania | |
VIC | Victorian Equal Opportunity & Human Rights Commission | |
WA | Western Australian Equal Opportunity Commission | |
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.