கணிதம் கற்பதிலும் கற்பித்தலிலும் வேறுபாடுகள் இருக்கிறதா? புதிருக்கான விடை!

Viewpoints

Boy in Math Class (Copyright 2008, Mike Watson Images Limited.); Inset: Jeyanthi Subramanian Credit: MOODBOARD

கணிதம் கற்பிக்கும் முறை, கற்கும் முறை இவை இரண்டும் எப்படி கலாச்சாரத்தாக்கங்களுக்கு உள்ளாகின்றன என்பதை, ஆராய்ச்சியாளர், ஜெயந்தி சுப்ரமணியன் வாயிலாகவும், ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சுபா, மாணவர்கள் சமந்தா, ஆர்த்திகன் வாயிலாகவும் அறியும் முயற்சி.


கற்பவர் கண்ணோட்டத்தை அவதானிக்கும் முறையைப் பயன்படுத்தி ஜெயந்தி சுப்ரமணியன் செய்த ஆராய்ச்சிக்கும் ஆஸ்திரேலியாவில் கணிதம் கற்பிக்கும் முறைகளுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள், பழந்தமிழரின் கணித நூல்களான, கணக்கதிகாரம், கணித நூல் என்பன முற்காலத்தில் தமிழர் கணிதத்தை எப்படிக் கற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் நிறைந்த நிகழ்ச்சியைத் தொகுத்திருக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.

2013ஆம் ஆண்டு நாம் ஒலிபரப்பிய ஒரு நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு
 





சேவகன் சம்பளக் கணக்கு

ஓர் அரசனிடத்தில் ஒருவன் சேவகனாக வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு வராகன் சம்பளம். அவன் 31 நாட்களுக்கு அரசனிடத்தில் வேலை செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டான். சேவகன் எப்பொழுது வேலையில் இருந்து நின்றாலும் அத்தனை நாட்களுக்குச் சம்பளம் ஏற்றவாறு 31 வராகன் எடையில் அரசன் 5 மோதிரங்களைச் செய்து விரலில் அணிந்து கொண்டான். அந்த 5 மோதிரங்கள் ஒவ்வொன்றும் எத்தனை வராகன் எடை கொண்டவை?

புதிர் 17:30, பதில் 18:00 இலிருந்து.



The Learner's Perspective Study (LPS) pioneered by Dr David Clarke inspired a search on how mathematics is taught in the Indian Subcontinent and how students from the subcontinent in Australia learn mathematics.
Kulasegaram Sanchayan interviews one of the researchers, Jeyanthi Subramanian, who has adopted LPS methodology to understand classroom teaching in Tamil Nadu, and compares that with a high school mathematics teacher and two students in New South Wales.

In this segment, the researcher also exposes us to ancient Tamil text on Mathematics, "Kannakkathikaaram", and Kanitha Nool."

This is a rebroadcast of a 2013 production.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share