COVID-19 பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 18% உயர்ந்துள்ள நிலையில் குடும்ப மருத்துவர்களின் பற்றாக்குறை ஏன் நீண்டகாலமாக நீடிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நாட்டில் மருத்துவ சேவை வழங்குபவர்களைக் கட்டுப்படுத்தும் Australian Health Practitioner Regulation Agency (AHPRA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு, 877,119 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் நாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது, அத்துடன் 5,000 பேர் மாதந்தோறும் மருத்துவர்களாக இங்கு பணியாற்ற விண்ணப்பிக்கின்றனர் என்றும் கூறுகிறது.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மருத்துவர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது. அப்போது 118,996 என்று இருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை, , இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 136,742 ஆக உயர்ந்துள்ளது. இப்படியான வளர்ச்சி இருந்தபோதிலும், 2031ஆம் ஆண்டளவில், குடும்ப மருத்துவர்கள் எண்ணிக்கையில் 10,600 பற்றாக்குறை இருக்கும் என்ற கவலை வெளியாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் குடும்ப மருத்துவர்களுக்களின் சேவைகளுக்கான தேவை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப மருத்துவ துறையில் ஈடு பட்டவர்களுடன் இது குறித்த ஒரு கலந்துரையாடலை மேற்கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் பங்கு கொண்டவர்கள்: தனது சொந்த மருத்துவ சேவை நிலையத்தை நிறுவி நிர்வகித்து வரும் Dr பரண் சிதம்பரகுமார், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிட்னியில் குடும்ப மருத்துவராகக் கடமையாற்றும் Dr பகி சிவா, மற்றும், ஒரு குடும்ப மருத்துவராக விரும்பும் அர்ப்பணிப்புள்ள மருத்துவ மாணவி சமந்தா விக்னேஸ்வரன். அவர்கள் மூவரும் நாட்டில் குடும்ப மருத்துவர்களின் பற்றாக்குறையின் சாத்தியமான விளைவுகள் குறித்த தமது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.