இது சீனப் புத்தாண்டாகவும் கருதப்படுகிறது.
சீனப் புத்தாண்டின் வரலாற்றையும் ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் அது எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதையும் ஆராய்வோம்.
சந்திரப்புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் மாறுபடும், சில நேரங்களில் ஜனவரி மாதத்திலும் மற்றும் பிற நேரங்களில் பிப்ரவரி மாதத்திலும் நிகழ்கிறது.
பல கலாச்சாரங்களில் இது ஒரு குறிப்பிட்ட இராசி விலங்குடன் தொடர்புடையது, 12 வருட சுழற்சியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு விலங்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சீன மற்றும் ஆசிய ஆய்வுகளில் மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிவருகிறார் டாக்டர் Pan Wang. சந்திரப்புத்தாண்டு வசந்த விழா, விளக்குத் திருவிழா வரை பதினைந்து நாட்கள் நீடிக்கும் என்று கூறுகிறார்.
Chinese dancers perform during the Sydney Lunar Festival Media Launch at the Chinese Garden of Friendship in Sydney on February 9, 2021. Source: AAP / AAP Image/Bianca De Marchi
ஆஸ்திரேலியாவில் சந்திரப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சீன, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய கலாச்சாரங்களைப் பற்றி அறிய ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் கூறுகிறார்.
சந்திர நாட்காட்டியின் 15வது நாளில் விளக்குத் திருவிழா நடைபெறுகிறது. விளக்குத் திருவிழாவில் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தைகளுக்காக இந்த சிறிய விளக்கை உருவாக்குவார்கள், மேலும் அவர்கள் தங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே விளக்குகளை ஒளிரச் செய்வார்கள் என விளக்குகிறார் டாக்டர் Kai Zhang.
ஆஸ்திரேலியா முழுவதும் சீனப் புத்தாண்டு பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. மீன், மோதகம் உட்பட பலவகையான சீன உணவுகள் சாப்பிடுதல், குடும்பத்தினருடன் ஒன்றுகூடுதல் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் என லூனார் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீன கலாச்சாரம் பற்றிய அறிவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பட்டறைகளையும் இதன் போது நடத்தப்படுகிறது. மேலும், சிங்க நடனம், டிராகன் நடனம் மற்றும் சிவப்பு நிறம் மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. சீனர்கள் குழந்தைகளுக்கு சிவப்பு உறை கொடுப்பதும் ஒரு பாரம்பரியம் என்று கூறுகிறார் டாக்டர் Wang.
அவுஸ்திரேலியாவிற்கும் அவரது தாய்நாட்டிற்கும் உள்ள கொண்டாட்டங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சீனாவில் நீண்ட பொது விடுமுறை கடைப்பிடிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்துடன் ஒன்றுகூட நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்றும் சீனாவைப் போலவே, ஆஸ்திரேலியாவின் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று டாக்டர் Tang குறிப்பிடுகிறார்.
கிரிகோரியன் நாட்காட்டி நவீனகால சீனாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், பாரம்பரிய சீன நாட்காட்டி சீனாவிலும் வெளிநாட்டு சீன சமூகங்களுக்கிடையில் இன்னும் குறிப்பிடத்தக்கதாக பயன்பாட்டில் உள்ளது.
ஏனென்றால், பாரம்பரிய சீன நாட்காட்டியானது, சந்திர சீனப் புத்தாண்டு, விளக்குத் திருவிழா மற்றும் சிங்மிங் திருவிழா (கல்லறை துடைக்கும் நாள் என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற பாரம்பரிய விடுமுறைகளைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது.
கூடுதலாக திருமணங்கள், இறுதிச் சடங்குகள், புதிதாக வணிகம் தொடங்குவதற்கு நல்ல நாட்களைத் தேர்ந்தெடுக்கவும் பாரம்பரிய சீன நாட்காட்டியானது பயன்படுகிறது.
Source: AAP / AAP Image/Jeremy Ng
தைவான் மற்றும் தென் கொரியாவில் சில வருடங்கள் வாழ்ந்த அவர், சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் சிறந்த நினைவுகளைக் கொண்டுள்ளார்.
தென் கொரியாவில் சந்திரப் புத்தாண்டு என்பது ஒருவரின் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நேரம் என்று டாக்டர் Smith கூறுகிறார்.
சந்திரப் புத்தாண்டு அணிவகுப்புகளின் போது பாரம்பரியமாக காட்டப்படும் சிங்க நடனம் உட்பட கொண்டாட்டங்களின் பல கூறுகள் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வருகின்றன.
சீன இராசி ஆண்டு சந்திர புத்தாண்டில் தொடங்கி முடிவடைகிறது. 12 ராசிகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு ராசி விலங்கால் குறிப்பிடப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு அடையாளமும் அதன் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகிய 12 ராசி விலங்குகள் உள்ளன.
12 சீன இராசி விலங்குகளை சுற்றி ஒரு புராணக்கதை உள்ளது என்று டாக்டர் Wang கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.