SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் அது ஏற்படுத்தும் சர்ச்சையும்!
Dr Chandrika Subramaniyan, Anaganbabu & Councillor Suman Saha
சிட்னி பெருநகரின் Pendlehill Civic Park எனும் அரசு பூங்காவில் கடந்த வியாழக்கிழமை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் பூங்காவில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட விதமும், திருவள்ளுவர் சிலை பூங்காவில் இருக்கும் நிலையும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றவர்கள்: தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் அனகன்பாபு, Cumberland City Councilலின் Lord Mayor Lisa Lake & Wentworthville Ward Councillor Suman Saha ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share