SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
உளமார்ந்து வாழ்தல் (Mindfulness): எளிய விளக்கமும், கடைபிடிக்கும் முறைகளும்
Dr. Ramaswami (Ram) Mahalingam
டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள் புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல் மற்றும் சமூக வர்க்கம் ஆகியவற்றை அவர் விமர்சன கலாச்சார உளவியல் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றார் (www.mindfuldignity.com). அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினரான டாக்டர். மகாலிங்கம் அவர்கள், தனது கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்காக பல விருதுகளைப் பெற்றதோடு, FeTNA வழங்கும் பெருமைமிகு “தமிழ் அமெரிக்கன் முன்னோடி (Tamil American Pioneer Award)” விருதையும் பெற்றவர். பேராசிரியர் ராம் அவர்கள் சமீபத்தில் சிட்னிக்கு வருகைதந்தபோது அவரை நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Share