SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“வானொலி மாமா” நா. மகேசனின் நேர்முகம்
N.Mahesan
“வானொலி மாமா” என்று அழைக்கப்பட்ட நா. மகேசன் அவர்கள் ஜூன் 22 (வியாழன்) சிட்னியில் காலமானார். இலங்கை வானொலியில் 'சிறுவர் மலர்' நிகழ்ச்சி மூலம் தனது கலைப்பணியை துவக்கியவர் நா. மகேசன் அவர்கள். சிறுவர்களுக்காக நிகழ்ச்சி படைப்பதில் அவர் வல்லவர்; பெரிதும் புகழப்பட்டவர். சிட்னியில் தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி NSW அரசு 2006இல் அவருக்கு “The Achiever” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்த்தின் மறு ஒலிபரப்பு இது. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share