Warning: This content contains details about a domestic violence crime that may be confronting or distressing.
குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் ஒரு செயலுடன் தொடங்குவதில்லை. இது பெரும்பாலும் அவமரியாதை, கட்டுப்பாடு மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் குறித்த அறிகுறிகளுடன் தொடங்குகிறது, அவை கவனிக்கப்படாமல் போகலாம்.
குடும்ப வன்முறையை நிறுத்துவது என்பது மோசமான சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமல்ல. அவை மிகவும் தீவிரமான ஒன்றாக வளருவதற்கு முன்பு அவற்றைத் தடுப்பது பற்றியது.
Arman Abrahimzadeh அடிலெய்டை தளமாகக் கொண்ட ஒரு குடும்ப வன்முறை எதிர்ப்பு பிரச்சாரகர் மற்றும் குடும்ப வன்முறையைத் தடுப்பதற்காக போராடி வருபவர். தனது தந்தையால் மேற்கொள்ளப்பட்ட குடும்ப வன்முறையால் தான் தனிப்பட்ட ரீதியாக முன்பு பாதிக்கப்பட்டதாக கூறும் அவர் தந்தையை விட்டுவிட்டு தாய் மற்றும் சகோதரிகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்ந்து நிகழும் ஒரு வீட்டை விட்டு வெளியேறுவது வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதாக Arman நம்பினார். ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய Arman உம் குடும்பத்தினரும் வீடற்ற தன்மை, வறுமை மற்றும் தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டை விட்டு வெளியேறி 12 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 2010 இல் அடிலெய்டில் ஒரு பாரசீக புத்தாண்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற Arman இன் தாயாரை நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தந்தை குத்திக்கொலை செய்தார்.
Arman Abrahimzadeh with his late mother Zahra Abrahimzadeh. Credit: Arman Abrahimzadeh
எனவே, குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்களை நாம் முன்னிலைப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைத் தேடுவதன் மூலம் அது நிகழும் முன் அதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
Arman தனது சொந்த அனுபவத்திலிருந்தும், தனது நினைவுகளைப் பற்றியும் சிந்தித்து, மாற்றத்தை நமது வீடுகளிலிருந்தே தொடங்கலாம் என்று கூறுகிறார். அதாவது ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும் பழக்கத்தை நமது வீட்டிலிருந்தே தொடங்குவது.
குறிப்பாக நம் குழந்தைகளை மரியாதைக்குரிய மற்றும் பரிவுள்ள நபர்களாக எவ்வாறு வளர்ப்பது என்பதில் கவனம் செலுத்துவது.
இளைஞர்கள் தங்கள் வீடுகளில் காணும் நடத்தையைப் பின்பற்றுகிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார்கள், அதை சாதாரணமாகக் கருதுகிறார்கள் என்று Arman நம்புகிறார். எனவே பரிவு, மரியாதை மற்றும் சமத்துவம் பற்றிய உரையாடல்கள் ஒவ்வொரு குடும்பத்தினதும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்
பெற்றோர் ஒருவரையொருவர் நடத்தும் விதம், அவர்களைச் சுற்றியுள்ள பிள்ளைகளின் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் JK Diversity Consultantsஸின் இயக்குநராகவும், ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிப்பின்னணிகொண்ட சமூகங்களுடன் பணியாற்றுவதில் நிபுணத்துவம் மற்றும் அங்கீகாரம் பெற்ற mental health social workerஆகவும் உள்ள Jatinder Kaur.
Parents and carers should be aware of how they communicate and demonstrate respectful relationships. Source: iStockphoto / Jacob Wackerhausen/Getty Images
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, ஆன்லைனிலும் மரியாதைக்குரிய கலாச்சாரத்தை வளர்ப்பதில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் முக்கிய பங்கை NSW காவல்துறையின் முன்னாள் Sergeantஉம் மற்றும் குடும்ப வன்முறை பிரிவில் பணியாற்றுபவருமான Danny Mikati வலியுறுத்துகிறார்.
நவீன தொழில்நுட்பங்கள் அவமரியாதை மற்றும் தவறான நடத்தைகளை எளிதாக்கும் என்றும், அவை யாருடைய விரல் நுனியையும் எளிதாக அணுக முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் வேரூன்றுவதற்கு முன்பு ஆரோக்கியமான உறவுகள் எப்படி இருக்கும் என்பதை இளைஞர்களுக்குக் கற்பிப்பது அவசியம் என Danny Mikati வலியுறுத்துகிறார்.
குடும்ப வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கும் சமூகங்களுக்குள் ஆரம்பத்திலேயே அதைத் தடுப்பதற்கும் ஆஸ்திரேலிய அரசால் பல முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டும் அவர் இவற்றில் முக்கியமான ஒன்று அரசின் Stop it at the Start பிரச்சாரம் எனத் தெரிவித்தார்.
Young people tend to mimic the behaviour they see in their family homes, adopt it, and consider it normal. Credit: Phynart Studio/Getty Images
திறந்த உரையாடல்கள் மற்றும் கேள்விகளைக் கேட்பதற்கான சூழலை உருவாக்குவதன் மூலம் தற்போதுள்ள பாரம்பரிய மதிப்புகள் அல்லது சமூக எதிர்பார்ப்புகளை சமநிலைப்படுத்தி, குழந்தைகளை ஆரோக்கியமான உறவுகளை நோக்கி வழிநடத்த முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
குடும்ப வன்முறையைத் தடுக்கவும், அது தொடங்குவதற்கு முன்பே அதை நிவர்த்தி செய்யவும் உதவக்கூடிய ஒரு பயனுள்ள வழி, துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை நடத்தைகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல் அவற்றிற்கெதிராக செயற்படுவதாகும்.
Parents, teachers, guardians, and carers should become better equipped to recognise and address signs of disrespect and guide their children towards understanding healthy relationships. Source: iStockphoto / dusanpetkovic/Getty Images/iStockphoto
If you or someone you know is impacted by sexual assault or domestic or family violence, call 1800RESPECT on 1800 737 732 or Lifeline – 13 11 14.
Stop it at the Start பிரச்சாரம் சமூக உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் தகவல்களை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு, ஐப் பார்வையிடவும்.
In partnership with Stop it at the Start, an Australian Government initiative.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our
page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.