டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்

Damon Foard

Damon Foard

இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து அரசியல் தஞ்சம் கோரிய டேமன் ஃபோர்ட், நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அமைச்சரிடம் முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. டேமன் ஃபோர்ட் நீதிமன்றத்திற்குச் சென்றார். அமைச்சர் அவரது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை வழங்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


டேமன் ஃபோர்ட் தனது கதையை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share