மைல்ஸ் ஃபிராங்க்ளின் (Miles Franklin) இலக்கிய விருது என்பது “ஆஸ்திரேலிய வாழ்க்கையை, அதன் எந்தக் கட்டத்திலும் முன்வைக்கும் மிக உயர்ந்த இலக்கியத் தகுதி வாய்ந்த ஒரு நாவலுக்கு” வழங்கப்படும் வருடாந்திர இலக்கியப் பரிசாகும். My Brilliant Career என்ற பிரசித்தி பெற்ற ஆஸ்திரேலிய நாவலை 1901ஆம் ஆண்டு வெளியிட்ட மைல்ஸ் ஃபிராங்க்ளின் (1879-1954) அவர்களின் விருப்பத்தின்படி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு நிதியளிப்பதற்காக அவர் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். வருடாவருடம் பரிசுத் தொகை அதிகரித்து வருகிறது, 2016 ஆம் ஆண்டில் இந்த விருதின் பெறுமதி 60,000 ஆஸ்திரேலிய டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதினை இந்த வருடம் பெற்றிருக்கும் சங்கரி சந்திரன் அவர்களுடன் இந்த விருது குறித்து உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன். அந்த நேர்காணலைத் தொடர்ந்து, விருது பெறும் நாவல் குறித்து கடந்த ஆண்டு சங்கரி சந்திரன் எமக்கு வழங்கிய நேர்காணலைக் கேட்கலாம்.
முன்னர் எழுதிய கதை: நேர்காணல் பாகம் 1
இலங்கை - இருளும் ஒளியும் ஒன்றாய்க் கலந்த தீவு - பாகம் 1
SBS Tamil
07/06/201714:49
முன்னர் எழுதிய கதை நேர்காணல் பாகம் 2
இலங்கை - இருளும் ஒளியும் ஒன்றாய்க் கலந்த தீவு - பாகம் 2
SBS Tamil
07/06/201715:20
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.