விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

விக்டோரிய மாநிலத்தின் Pakenham என்ற இடத்தில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Karunakaran Rasasundran

Karunakaran Rasasundran with his family

கருணாகரன் ராசசுந்தரன் என்பவர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வந்து, 6 வருடங்கள் சிட்னியில் வசித்து வந்த பின்னர், அவரது பாதுகாப்பு வீசா நிபந்தனைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு விக்டோரிய மாநிலத்தின் Pakenham என்ற தூர இடத்தில் குடியமர்ந்தார் என்றும், அவர் கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 4ஆம் தேதி) அதிகாலை மரணமடைந்துள்ளதாகவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்து வருவதாகவும் திரு. அரன் மயில்வாகனம் குற்றம் சாட்டினார்.
பிராந்திய தேசத்தில் வாழ்ந்த அவருக்கு, மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிக்கான சரியான ஆதரவு அங்கு கிடைக்கவில்ல
திரு. அரன் மயில்வாகனம்
“மறு சுழற்சித் துறையில் கடினமாக உழைத்து வந்த 39 வயதான கருணாகரன் ராசசுந்தரன், போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் சுமைகளுடன் வாழ்ந்து வந்தவர். பிராந்திய தேசத்தில் வாழ்ந்த அவருக்கு, மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிக்கான சரியான ஆதரவு அங்கு கிடைக்கவில்லை. தனது மனைவி, ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறு குழந்தைகளை விட்டுவிட்டு அவர் காலமாகியுள்ளார்” என்று அரன் மயில்வாகனம் மேலும் கூறினார்.

இதேவேளை, கருணாகரன் ராசசுந்தரனின் இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கும் நிர்க்கதியான அவரது குடும்பத்திற்கு உதவி வழங்கவும் தமிழ் ஏதிலிகள் கழகம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் திரு. அரன் மயில்வாகனம் கூறினார்.




நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கிறீர்கள், யாரிடமாவது பேச வேண்டும் என்றால், தயவுசெய்து 13 11 14 என்ற இலக்கத்தில் Lifelineஐ அல்லது 1300 224 636 என்ற இலக்கத்தில் Beyond Blueவை அழைக்கவும்.




If you are experiencing a personal crisis and need someone to talk to, please call Lifeline on 13 11 14 or Beyond Blue on 1300 22 4636




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 6 February 2023 12:38pm
By Kulasegaram Sanchayan
Source: SBS

Share this with family and friends